பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஒளவையார் ' வெய்தாய், நிறுவிதாய், வேண்டளவும் தின்பதாய், கெய்தான் அளாவி, கிறம்பசந்த-பொய்யா அடகு என்றுசொல்லி அமுதத்தை யிட்டார் கடகம் செறிந்த கையார்.' - 'பாரி பறித்த பறியும், பழையனூர்க் காரி கொடுத்த களைக்கொட்டும்-சேரமான் வாராய்' என அழைத்த வார்த்தையும் ; இம்மூன்றும், நீலச்சிற் ருடைக்கு நேர்.' தம்பால் அன்பு காட்டி ஆதரித்த அம் மகளிர் மணப் பருவம் எய்திய மங்கையராதலின், அவர்க்கு மணம் முடித்துவைத்தலே, தம்முடைய தலையாய கடன் என எண்ணினர் ஒளவையார் : அம் மகளிர்க்கு மணம் செய்து வைக்க முயன்று தோற்ருர் கபிலர் என்பதையும் அவர் அறிவார் ஆதலின், அவர்களே, அவ்வரசர்பால், மீண்டும் அழைத்துச் செல்ல விரும்பவில்லே பாரிமகளிரை மணந்து கொள்ளத்தக்க பீடும், பெருமையும், அறிவும், ஆற்றலும், ஆண்மையும், அழகும், ஒழுக்கமும், உயர்வும் உடையான் யாவன் என எண்ணிப்பார்த்து, இவ்வளவு உயர் குணங் களும் ஒழுங்குடையான், பெண்ணையாறு பாயும் திரு முனேப்பாடி நாட்டுத் திருக்கோவலூர் அரசன், தெய்விகனே என்பதறிந்து அவன்பால் அவ்விரு மகளிரையும் அழைத் துச் சென்று மணம் முடித்துக்கொள்ளுமாறு வேண்டினர்; புலவர் வேண்டுவனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவர் அகமும், முகமும் மலர அள்ளி அள்ளிக் கொடுக்கும் அருள் உள்ளத்தகிைய அவனும், ஒளவையாரின் வேண்டு கோளே ஏற்க மறுத்தான் , ஒளவையார்க்குச் செய்வ தொன்றும் புலப்படவில்லே. ' ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ? பேடியர் அன்ருே பெற்றியில் கின்றி.டின் ?" - (மணிமேகலை : க.-உச-டு) என்று ப்ாராட்டுதற்கேற்ற பேரழகும், சிரிளமையும் வாய்ந்தவர் பாரி மகளிர் : குலத்தால், குணத்தால் குறை யுடையாரல்லர் அறிவிலும், அன்பிலும் அனேவரினும்