பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப் பற்றிய கதைகள் 109% மனேவியர்பாலும் ஒப்படைத்துச் சென்ருன் அவன் மீண்டும் வருவதற்குள், இளேயாள் அம் மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு, மூத்தாள்மீது பழி சுமத்தத் துணிந்தாள்: இளேயாள்பால் கொண்டிருக்கும் அன்பால், அவள் கூறு வதையே அவனும் உண்மையெனக் கொள்வன்; அவனுக்கு அப் பலாமீது இருக்கும் ஆர்வத்தால் தன்னே யாது செய் வானே என அஞ்சி அழத்தொடங்கினுள்; அப்போது அவ்வழியாக வந்த ஒளவையார், அழுதுகொண்டிருக்கும் அவள்பால் சென்று, அவள் துயர் கேட்டறிந்து, அவள் பால் அன்பும் இரக்கமும் கொண்டு, அவள் அளித்த ஒரு படி தினேயைப் பெற்றுக்கொண்டு, - * . . . 'கூரிய வாளாற் குறைத்திட்ட கூன் பலா, ஓரிதழாய்க் கன்ரு, வுயர் மரமாய்ச்-சிரியதோர் , வண்டுபோற் கொட்டையாய், வண்காயாய்த், தின்பமுமாய்ப். பண்டுபோல் நிற்க பலா" எனப் பாடி, அப்பலாமரத்தைப பண்டேபோல் தழைத்து கிற்கச்செய்து, மூத்தாள் துயர் துடைத்துச் சென்ருர். (8) ஒளவையாரும், கம்பரும்: ஒளவையாருக்கும், கல்வியிற் பெரியாராகக் கருதப் படும் கம்பருக்கும் யாது காரணத்தாலோ பகை உண்டாகி விட்டது; அதன் காரணத்தால் கம்பரையும், அவர் பாடல் களேயும் பழிப்பதை வழக்கமாகக் கொண்டார் ஒளவையார்: கம்பரை அரசவைப் புலவகைக்கொண்டு பெருமை செய் யும் சோழ அரசன், அவர்பாடலைப் புகழ்ந்து பாராட்டு வதைக் காணப்பொருமல், ஒளவையார், கம்பன் பாடல் கற்ருர் போற்றுதலைப்பெறும் பெருமை வாய்ந்ததன்று: அவர், பாராட்டப் பெறுதற்குப் பேரரசன் ஒருவனேச் சார்ந்து பெருவாழ்வு வாழ்வது காரணமேயன்றி, அவர் அறிவோ, புலமையோ காரணமாகா அறிவுடையோர் இல்லாவிடத்தேதான் அவர் பாட்டுப் பெரும் பாட்டாகப் பாராட்டப்பெறும்; கற்ருர்முன்னர் அவர் புகழ் அற்றுப் போகும்,' என வசைபாடி வருவ்ாராயினர்; மேலும்,.