பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

建10 - ஒளவையார் அப் பகை காரணமாகவே, சிலம்பி என்ற பெண் ஒருத்தி யிடம் ஐந்நூறு பொன் பெற்றுக்கொண்ட கம்பர், அவள் மீது பாதிப்பாட்டே பாடிவிட்டு வர, ஒளவையார், அவள் அளித்த கூழ்உணவிற்காகவே, அப்பாட்டின் பின் இரண்டு அடிகளைப் பாடிமுடித்து, அவளேப் புகழ்ந்ததோடு, ஏழை அளிக்கும் கூழுக்கும் பாடும் எளியவள் ஒளவை எனக் தனக்குப் புகழையும், கைக்கிறையப் பொருள் பெற்றும், குறைப்பாட்டுப் பாடும் செருக்குடையோன் கம்பன் எனக் . கம்பர்க்குப் பழியையும் ஆக்கித் தந்தாள். இவ்வாறு தன் சீனப் பழிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிருள் ஒளவை என்பதறிந்த கம்பன், ஒளவையார்பால் சினங் கொண்டு, அவரை 'அடி' என அழைத்து இழிவு செய் தாராக, ஒளவையார், கம்பன் தன்னே ஒரு சொல்லால் இழிவுபடுத்தியதற்காக அவரை, அவலட்சணம், எருமைக் .கிடா, கழுதை, குட்டிச்சுவர் குரங்கு என்ற இழிசொற்கள் .பல கூறி அழைத்துத் தாழ்வு படுத்தினர். மேலும், வேளுர்ப்பூதன் விருந்தின் சிறப்பு, கோரைக் கால் ஆழ்வான் கொடையின் இழிவு, சோமன் கொடை அருமை ஆக இவை குறித்தும் ஒளவையார் அழகிய பாடல்கள் பல பாடினர் எனவும் தமிழ் நாவலர் சரிதை நமக்கு அறிவிக்கிறது. இவையேயன்றி, ஆத்திகுடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலாய அால்களேயும் ஒளவையாரே பாடினர் என்றும் கூறுவர்.