பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. ஒளவையார் கதைகளின் ஆராய்ச்சி “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' (திருக்குறள்: சஉகூ} என்ற பொருளுரையை மேற்கொண்டு, கூறும் ஆளின் தகுதி திறமைகளே நோக்காது, அவர் கூறிய, பொருளின் உண்மை இன்மைகளே அறிந்துகொள்வதை விடுத்து, கூறிய பொருளின் உயர்வு தாழ்வுகளே உள்ளவாறு: உணர்ந்து மதிக்க மறுத்து, கூறிய ஆளின் தகுதி, தகுதி கயின்மைகளுக்கேற்ப, அவர் கூறும் பொருளே ஏற்பதும் தள்ளுவதும் ஆகிய இழிகிலேக்கு நாடு வந்துவிட்டது. நாட்டின் கிலே இதுவென அறிந்துகொண்ட காரணத்தால், தம் மனத்திடை மலர்ந்த எண்ணங்கள் நல்லன. ஆயினும் சரி, தியன ஆயினும் சரி, அவற்றை நாட்டு மக்கள் ஏற்க வேண்டும் என்று எண்ணியவர்கள், அவ்வளவு பேரும், அவை தம் கருத்தே, தம் உள்ளத்திடை உதித்தனவே என்று கூறுவதற்குப்பதிலாக, அன்று, அந் நாட்டு மக்கள் மனத்தில் இடம்பெற்றிருக்கும் மதிக்கத்தக்க பெரியார் ஒருவரைக் காட்டி, அவர் கூறிய கருத்து இது, என்று கூறுவதை வழக்கமாக மேற்கொள்வராயினர்; அவர் கூறினரா? சரி, அது நல்லதாகத்தான் இருக்கும்; அதை ாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்;" என்று எண்ணி ஏமாந்து விடுகின்றனர் மக்கள். எப்படியோ "கம் கருத்து, நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே,” என்பதிலே அக் கருத்தாளர்களுக்கு அகமகிழ்ச்சி. இந்த வழக்கம் இன்று மட்டும் காணக்கூடியதன்று : எத்தனேயோ நூறு ஆண்டுக் காலமாகவே, இவ்வழக்கம் நாட்டில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. . . இடைக்காலத்தில் யார் யாரோ பாடல் புனேந்தனர்; அப் பாடல்கள், எத்தனையோ பொருள்களே அடிப்படை யாகக் கொண்டு பாடப்பெற்றுள்ளன ; ஆளுல், அப்பாடல் -களைப் பாடிய புலவர் யார் என்பதை இப்போது அறிதல் இயலாது பாட்டைப் பாடிய புலவர்கள், அப் பாடல்கள்