பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஒளவையார் தம்மால் பாடப்பெற்றனவே என்பதை, அக்கால மக்கள் அறிந்தால், அவற்றை ஏற்க மறுப்பரோ என அஞ்சினர்: ஆகவே, அவர்கள், அக்கால மக்களால் மதித்துப் போற்றப் பெறும் மறைந்துபோன புலவர் சிலர் பெயரைக் கூறி, "அவர்கள் பாடிய பாடல் இவை இன்ன இடத்தில் கண்ட ஏட்டில் கண்டவை இவை எனக் கூறினர்; அதல்ை அக் கால மக்களும் அவற்றை ஏற்றுப் போற்றினர்; அன்று முதல், புலவ்ர் ஒருவர் பாடாத பிறர் பாடிய் பாடல்கள் பல, அப்புலவர் பாடியனவாகத் தமிழ்நாட்டில் உலவலாயின்: ஏமாறுவதும், ஏமாற்றுவதும் ஆகிய இந்நாடகம், இங்கனம், எங்கும் நிகழத்தொடங்கவே, அந் நாடகம் மேலும் வளர் லாயிற்று பாடாத பாடல்களேப் பாடினர் என்பது ஏற்றுக் கொள்ளப்படவே, "இப் பாடல் பாடியது.இன்ன காலத்தில்: இன்ன காரணத்திற்காக இப் பாடல் பாடியதால் விளைந்த, பல்ன் இது” எனச் சில கதைகளே இட்டுக் கட்டிக்கூறவும், அவற்றை நம்ப்வும் மக்கள் தொடங்கிவிட்டனர். இவ்வழி யாகப் பண்டைப் புலவர்கள் பாடாத பல பாடல்கள், அவர் பாடியனவாகக் கருதப்பட்டதோடு, அவர்கள் வாழ்க்கை யில் நடைபெரு நிகழ்ச்சிகள் பலவும், அவர்கள் வாழ்க்கை யோடு தொடர்பு படுத்தவும் பட்டுள்ளன. முற்பகுதியில் கூறப்பட்ட ஒளவையார் வரலாறு குறித்த கதைகள் எல்லாம், இம்முறையாகத் தோன்றியனவே ஆதலின், அக். கதைகளின் உண்மை இன்மைகளே உள்ளவாறு அறிய -முயலுதல் தமிழறிஞர் கடம்ை. - ஒளவையார் பிறப்புக் குறித்தும், அவரோடு உடன் பிறந்தாராகக்கொள்ளும் உப்பை, அதியமான், உறுவை, கபிலர், வள்ளி, வள்ளுவர் முதலியோர் பிறப்புக் குறித்தும் வழங்கும் கதைகளே, ஒரு முறை நோக்கிருைம் அக் கதை. களுக்கிடையே ஒருமைப்பாடு இல்லாமையை உணர்வர். திருவள்ளுவர் சரித்திரம், அகத்தியர் புதல்வர் பெருஞ் சாகரர் என்பவருக்கும் திருவாரூர்ப் புலேச்சி ஒருத்திக்கும். பிறந்தவர் பகவன் என்றும், தவமுனி என்பவருக்கும், அருள்மங்கை என்னும் பார்ப்பனப் பெண்ணிற்கும்.