பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் கதைகளின் ஆராய்ச்சி 115 சென்றுவிட்டார். அவர் சென்று விட்டது கண்ட சேரமான் தம்குதிரைமீது அவரைத் தொடர்ந்தார் என்று கூறுகிறது: ஒளவையார் கதை, இருவரும் இணைந்தே சென்றனர் என்று கூறுவதோடு, அவ்விருவர் சென்ற ஊர்திகள் என் யாதேனும் இரண்டினேக் கூறுவதற்குப் பதிலாக, யானே, தேர், குதிரை என மூன்றைக் குறிப்பிடுகின்றது; இருவர் செல்ல மூன்று ஊர்திகள் ஏன் ? அல்லது தேரில் சென்ற மூன்றுவது ஆள் யார்? என்பன பற்றிய தெளிவுமில்லை: மேலும், அப்பாட்டு, விநாய்கரை வழிபடுவார்க்கு ஆகாதன இல்லே என்று கூறி, 'யானையும், தேரும், அதன் பின் வரும் குதிரையும் காதம் கிழவியும் காத்ம்' என்று கூறுவதன்றி, சேரமான் பெரும்ாள் நாயனர், சுந்தரர் இவர் பற்றிய வரலாற்றை அறிவிக்கும் ஆற்றலுடையதாகத் தோன்றவில்லே. * - - - - - - - - - மேலும், சங்கப்புலவர்கள் அறிந்து கூறிய கடவுளர்க் ளாகச் சிவன், திருமால், முருகன், வருணன், இந்திரன், பலராமன், கண்ணன் முதலியோரைத்தான் சங்கச் செய்யுட் கள் அறிவிக்கின்றனவேயன்றி, அவர் அறிந்த கடவுளர் களில் ஒன்று யானேமுகக் கடவுள் என்று அறிவிக்கவில்லை. ஆதலின், சங்ககாலப் புலவராகிய ஒளவையார் விநாயகரை வழிபடும் வழக்கமுடிையார் என்பதை ஏற்றுக்கொள்ளுமா றில்லே, மேலும், விநாயக வழிபாடு, தமிழர்க்குப் புறம பானது என்றும், சாளுக்கிய இரண்டாம், புலிகேசி என்பானே வெல்லப், பல்லவ நரசிம்மவர்மனுல் அனுப்பப் பெற்ற, பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் என அழைக்கப் பெறும், அவ்வரசன் தண்டத் தலைவர். பரஞ் சோதி என்பர்ர், கி. பி. 842 இல் சாளுக்கிய தலங்கர் வாதா பியை வென்று அழித்து, ஆங்கிருந்து கொணர்ந்த ஆரிய ಕ್ಲಿ ಕ್ಲಿ' அதுவே வாதிர்பி விநாயகர் என அழைக்கப்பட்டது. என்றும், அன்று முதல்தான் விங்ாயக் வழிபாடு தழிழ் நாட்டிலும் இடம் பெற்றது என்றும் வரலாற்றுக் குறிப்பு