பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் கதைகளின் ஆராய்ச்சி 117 4South Indian Inscription, Vol. VII No. 863) -96.6°W த் தெய்வீகனுக்கு மனம் செய்வித்தார் ஒளவையார் எனக் கூறும் தமிழ் நாவலர் சரித்திரச்சான்றினும் வலிவுடையன; ஏற்றுக்கொள்ளத்தக்கன ஆதலாலும், பாரிமகளிர் மனத திற்கு ஒளவையார் துண்ேபுரிந்தார் எனக் கூறுவதை உண்மையென ஏற்றுக் கோடற்கின்று. - ஒளவையார் வாழ்க்கையோடு தொடர்புடையதாகக் கூறப்படும் பிற நிகழ்ச்சிகளுக்கும் சான்ருக நிற்பது தமிழ் காவலர் சரிதையில் வரும் ஒளவையார் பாடல்களாம்; அத் தமிழ் நாவலர் சரிதையில் காணப்படும் அப் பாடல்கள் ஒளவையார் பாடியன அல்ல என்பதே அறிஞர்கள் கருத்து: அதற்கு அவர்கள் சாட்டும் ஆதாரங்கள் பல. - "தண்ணிரும் காவிரியே" என்ற செய்யுளைப் பொய்யா மொழிப் புலவர் பாதிபாட, ஒளவையார் பாதி பாடினர் என்று கூறுகிறது தமிழ் நாவலர் சரிதை, கம்பர் பாதிபாட ஒளவையார் பாதிபாடினர் என்று கூறுகிறது தனிப்பாடல் கிாட்டு. இவ்வாறு, பாட்டு ஒன்றே ஆக்வும், அப் பாட்டு குறிப்பிடும் வரலாற்றைக் குறிப்பிடுவதில், தமிழ் நாவலச் சரிதையும், தனிப்பாடல் திரட்டும் வேறுபடுகின்றன. சங்க இலங்கியங்களுக்கு இலக்கணமாம் எனப்படும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பெருத, தொல்காப்பியர் ஏற்றுக் கொள்ளாத, நேரிசை வெண்பாக்களும், எண்சீரடி ஆசிரிய விருத்தமும் தமிழ் நாவலர் சரிதையில் இடம் பெற்றுள்ளன. - - சங்கச் செய்யுட்களில் வழங்கப்பெருத ஆமலகம், பிரமன், கோடாங்கோடி, கங்காளன், கண்ணுலம், அக ளங்கா, சபித்து, சங்கியாதே போன்ற வடச்சொற்கள் தமிழ் காவலர் சரிதையில் காணப்படும் ஒளவையார் பாடல்களில் காணப்படுகின்றன. ஆகவே, அத்தமிழ் நாவலர் சரிதைக்கண் கவரும் பாடல்களே ஆதரமாகக் கொண்டு கூறப்படும் அக்கதை களும் ஆதாரமற்றன என்பதே முடிவாம். -