பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.18 ஒளவையார் தமிழ் நாவலர் சரிதைச் செய்யுட்களில் காணப்படு வதுபோன்றே, சங்ககாலத்துச் செய்யுட்களில் பயிலரத் சில சொல்லாட்சி முறைகள், ஒளவையார் பாடியவை எனக் கூறப்படும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண் டாம், கல்வழி முதலாய் நூல்களிலும் ப்யின்றுவாக் காண் கிருேம். - - ச, சை, ளு இவ்வெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வாரா என்று தொல்காப்பியம் கூறுகிறது. சனிநீராடு; ஞயம்படவுரை: சையெனத்திரியேல்; சந்ததிக்கழகு வந்தி செய்யாமை சையொத் திருந்தால் ஐய்மிட் டுண் என்னும் தொடர்கள் அவர் நூல்களில் வந்துள்ளன; சங்க்காலத்துப் பயின்று வாராத, உபகாாம், விடகாரி போன்ற பல வட் சொற்களும் அந் நூல்களில் ஆளப்பட்டுள்ளன. வான்கோழி என்ற பறவை ஆங்கிலத்தில் டர்க்கி (Turkye) என அழைக்கப்பெறும்; இப் பறவை துருக்கி நாட்டினின்றும் கொண்டுவரப்பட்டது எனக்க்ருதப்படுவ தால் அதற்கு அப்பெயர் இட்டு வழங்குவர் துருக்கர் கி. பி. 10 ஆம் நாற்ருண்டில் இந்தியாவிற்கு வந்தவராவர்: ஆகவே, இப்பறவையைப் பத்தாம் நூற்ருண்டிற்குப் பின் னரே நம் காட்டின்ர் அறிந்திருத்தல் கூடும். அப் பறவை கோழியின் இனத்தைச் சார்ந்து பெரிதாய் இருந்தமை பற்றி, அதற்கு வான்கோழி எனப் பெயர் இட்டு வழங் கின்ர். ஒளவையார், அப் பறவையை அறிந்துள்ளார்; "கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி'என் அதைப் பாடியும் உள்ளார்; இரண்டாம் நூற்ருண்டு ஒளவையார், பத்தாம் நூற்ருண்டுப் பறவையைப் பார்த்துப் பாராட்டி யது எவ்வாருே! 'மதுரமொழி நல்லுமையாள்" என்ற செய்யுள் ஒள்வையார், சுந்தரரோடு கைலே சென்ருர் என்று கூறு கிறது: "தேவர் குறளும்” என்ற செய்யுளில் வரும் 'மூவர் தமிழும்” என்ற தொடர் சுந்தரர் பாடிய தேவா ரத்தைப் பாராட்டினர். ஒளவையார் என்று கூறுகிறது: மூவர் தேவாரமும், மணிமொழியார் இருமொழியும்