பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் கதைகளின் ஆராய்ச்சி 3.19. முறைப்படுத்திப் பாராட்டப் பெற்றது அக் கால்வர் காலத் திற்குப் பின்னரே என்பர் என்ருல், சுந்தரரோடு தாமும் கைலை சென்றதாகக் கூறும். ஒளவையார் பாடலே உண்மை யென்க் கொள்வதா? சுந்தரருக்குப்பின் வாழ்ந்து அவர் பாடலேத் தாமும் பாராட்டியதாகக் கூறும் ஒளவையார் பாடலே உண்மையெனக் கொள்வதா? . இம் முரண்பாடுகளேயும், இடர்ப்பாடுகளேயும் கோக் கின், சங்க நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, நற் றினே, குறுந்தொகைக்கண் வரும் ஒளவையார் பாடல்கள் அறிவிக்கும் ஒளவையார் வரலாறே அவர் உண்மை வரலா மும் : தமிழ் நாவலர் சரிதையும் பிறவும் கூறும் ஒளவை யார் வரலாறு அவர் வரலாறு ஆகாது என்றும்,மேற்கூறிய சங்கச் செய்யுட்கள் மட்டுமே ஒளவையார் பாடல்களாம் ; ஏனேய அவர் பாடியன ஆகா என்றும் கொள்வதே அறிஞர் கள முடிபாம. - இனி, இவ் விடர்ப்பாடுகளைப் போக்க, ஒளவையாா என்ற பெயருடையார் ஒருவரல்லர் : இருவர் : ஒருவர், கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்து சங்கச் செய் யுட்களேப் பாடியவர் மற்ருெருவர், பத்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த தமிழ் நாவலர் சரிதையில் வரும் பாடல்களேயும், பிற நீதிநூல்களேயும் பாடியவர் என்று கொள்வாரும் 堡.GT伊”。 . ن. அவ்வாறு கொள்வதால், ஒளவையார் சுந்தாரோடும் பொய்யாமொழிப் புலவர் அல்லது கம்பரோடும் தொடர்பு ...கொள்வதற்கும், விநாயகரை அறிந்து வழிபடுதற்கும், வான்கோழியைத் தெரிந்து பாடுவதற்கும், நேரிசை வெண் பாக்களாகவும், எண்சிரடியா சிரிய விருத்தமாகவும் பாடித் தள்ளுவதற்கும், வடசொற்களேயும், வடசொற் சிதைவு களேயும் தம் பாட்டில் வாரி வழங்குவதற்கும் உள்ள தடை கள் நீக்கப்படுகின்றன. என்ருலும், போக்க முடியாய் ப்ெருந்தடைகள் சில புதியவாகத் தோன்றுதலே அவர்கள் அறிய மறந்து விடுகின்றனர். .