பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஒளவையார் தமிழ் நாவலர் சரிதையில் காணப்படும் செய்யுட் கல்ாப் பாடியவர் இரண்டாம் ஒளவையாரே என்பதை ஒப்புக்கொள்வதாயின், அச் செய்யுட்கள் கூறும் வரலாறு கள் அனைத்தும், அவ் விரண்டாம் ஒளவையாரோடு தொடர்புடைய உண்மை வாலாறுகளாம் என்பதையும் ஒப்புக்கொள்ளுதல் வேண்டும் , அப் பாடல்களைப் பாடிய ஒளவையாரே, பாரிமகளிர்க்கு மணம்செய்து வைத்ததாக வும், அதிகமான் கொடுத்த நெல்லிக்கனி உண்டு நெடுநாள் வாழ்ந்ததாகவும், - - 'பூங்கமல வாவிசூழ் புள்வேளுர்ப் பூதனையும் ஆங்குவரு பாற்பெண்ணே ஆற்றினையும்-ஈங்கே, மறப்பித்தாய் வாழ் அதிகா! வன் கூற்றின் 6ாவை அறுப்பித்தாய்; ஆமலகம் தந்து.' அப்பாடல்கள் அறிவிக்கின்றன . இவற்றையும் உண்:ை யென ஒப்புக்கொள்ளுதல் வேண்டும் ஆல்ை, அதியமான் கொடுத்த நெல்லிக்கனி உண்டவர் சங்க காலத்து முதல் ஒளவையாரே பாரிமகளிர் மணத்திற்கு ஒளவையார் துணைபுரிந்தது உண்மையாயின், அவ்வாறு துணைபுரிந் தாரும் அம்முதல் ஒளவையாராகவே இருத்தல் வேண்டும் என்பது, அனேவரும் அறிந்த உண்மை; ஆகவே, முதல் ஒளவையார்க்கு உரிய இச் செயல்களேத் தமக்கு உரியதாக இரண்டாம் ஒளவையாரும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறுவது எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடாத ஒன்ரும் அவ்வாறு கூறுவது தவறு: ஆகவே, அவ்வாறு கூறும், தமிழ்நாவலர் சரிதைச்செய்யுட்களும் தவறுடையனவே, இவ்விருவரலாறு குறித்துக் கூறும் செய்யுட்கள் தவறுடையன என்பது பெறப்படவே, அவ்விரண்டாம் ஒளவையாரின் பிறவரலாறு களேக் கூறும் பிற செய்யுட்களும் தவறுடையனவே. என்று கொள்வதே நேரிய முறையாம். ஆகவே, முன்னர் முடித்துக் கூறியதைப்போன்றே, தமிழ் நாவலர் சரிதைக்கண் வரும் பாடல்கள் முதல். ஒளவையாரால் பாடப்பெற்றனவும் அல்ல ; ஒளவையார்