பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் கதைகளின் ஆராய்ச்சி 重2篮当 சன்ற பெயர்கொண்டு பிற்காலத்தே வாழ்ந்த ஒருவரால் பாடப்பட்டனவும் அல்ல ; அவை அனேத்தும் urlກr பெயர் அறிவியாப் பிற்காலப் புலவர் ஒருவரால் பாடப் பெற்று ஒளவையார் தலைமீது சுமத்தப்பெற்ற அநாதைப் பாடல்களே என்று கொள்வதே முடிபாம். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், கல்வழி என்ற இந் நூல்கள் ஒளவையாரால் பாடப் பெற்றன எனக் கூறப்படுவதும் தவருே எனக் கேட்கலாம் காலடியார் என்ற நூல் ஒருவரால் பாடப்பெற்ற நூல் அனறு ; சங்கம் அமைதது வாழந்த சமணபபுலவர் பலரும் ஒவ்வொரு பாடல்பாட, அப் பாடல்களே எல்லாம் திரட்டித் தொகுக்கப் பெற்ற நூலே காலடியார் ; இஃது உண்மை யென்பது, ஒரே கருத்தினேக் கொண்ட பல பாக்கள் முன்னும் பின்னுமாக அந் நூலுள் காணப்படுவதால் மெய்ப்பிக்கப்பெறும். அதைப்போன்றே, ஆத்திசூடி முதலிய நூல்களே நோக்கியவழி, ஒரு கருத்தே மீண்டும் மீண்டும் கூறப்படுவது உய்த்துணரப்படும். அதனல், அவற்றை இயற்றியோரும் ஒருவராக இரார் பலர் பல காலங்களில் பாடின. அவற்றைத் தொகுத்து நூலாக ஆக்கினர் என்று கொள்ளத் தோன்றும் அவ்வாறு பாடிய அவர்கள் அனேவரும் கூடி ஓர் அவை அமைத்து வாழ்க் திருத்தலுங் கூடும்; அவர்கள் பாடியன ஆதலின், அங். ஆாலாசிரியர் பெயராக அவையார்' என்பது குறிப்பிடப் பட்டிருத்தலும்; கூடும் ஒளவையார் என்ற சொல் பழங் தமிழ் ஏடுகளில் 'அவ்வையார்” என்றே காணப்படும்; 'அவையார்' என்பதையும், 'அவ்வையார்' என்பதையும் கண்ட ஏடு எழுதியோர், அவையார்' என்ற சொல் தோன்றிய காரணத்தை அறியமாட்டாமையால், அச் சொல்லே, 'அவ்வையார்” என்ற சொல்லின் பிழை பட்ட வடிவமாகக் கொண்டு, அவையும் 'அவ்வையார்' என்றே இருத்தியிருத்தலும் கூடும்; பின்னர் அதுவும் ஒளவையார் என்றே எழுதப்பட்டிருத்தலும் கூடும் இம் முறையால் ஒர் அவையைச்சார்ந்தோர் பாடித்தொகுத்த அந்நூல்கள்.