பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨ ஒளவையார் வரலாறு

"ஒளவையாரைப் பெற்றெடுத்த தந்தை யார் தாய் யார் உற்றார் யார்? உடன் பிறந்தார் யார் அவர் பிறந்து வளர்ந்த ஊர் யாண்டுளது? அவரைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய குடி எது? அவர் கல்வி கற்றது எங்ஙனம்? கற்றுத் தந்த நல்லாசிரியர் யார்?" என்பன போன்ற வினுக்களுக்கு விடைகாணும் வாய்ப்பு, அவர் பாடலைப் பயின்றார்க்குக் கிடைத்திலது.

(1) பிறந்த குடி :

பழந்தமிழ்க் குடிகளில் பாணர் குடி என்பதும் ஒன்று: பாணன் பறையன் துடியன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியும் இல்லை" என்பது புறநானூறு. அவர்களுள், ஆண்மகன் பாணன் எனவும், பெண்மகள் பாடினி அல்லது விறலி எனவும் அழைக்கப்பெறுவர். பாணன், இசைக்கருவியோடு இணையுமாறு இன் குரல் எழுப்பிப் பாடிப் பாராளும் அரசர்களையும், ஊராளும் தலைவர்களையும் மகிழ்வித்துப் பரிசில்பெற்று மீள்வன். விறலியர், அப் பாணர் பின்சென்று, அப் பாணர் பாடும் பாடற்பொருளும், தாமே பாடும் பாடற்பொருளும் தெளிவாகத் தோன்றுமாறு கண்ணுனும் கையானும் நடித்து, ஆடிப்பாடிப் பரிசில்பெற்று மீள்வர். தாம் செல்லும் இடந்தோறும், தம் இன்னிசைக் கருவிகள் அனைத்தையும் பையுள் இட்டுக் கட்டித் தோளிற் சுமந்துகொண்டு செல்வதும் அவர் வழக்கமாம். மேற்கூறிய குடிகள் எல்லாம் தொழில்பற்றித் தோன்றினவே எனினும், இப் பாண்குடி ஓர் அளவு தாழ்வுடைக் குடியாகவே கருதப்படும்.

ஒளவையார், இப் பாணர்குடியில் பிறந்தவரே என்று கூறுவர் சிலர். அதற்கு ஆதாரமாக அரசன் ஒருவன் ஒளவையாரை "விறலி" என அழைத்தான் என ஒளவையார் அவர்களே பாடிய, "இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டல்குல், மடவால் உண்கண் வாணுதல் விறலி "