பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒளவையார் வரலாறு

என்ற பாட்டையும், அதியமான் என்ற அரசன், பரிசில் அளிக்காது நீட்டித்தபோது அவன்மீது சினங்கொண்ட ஒளவையார்,"வேற்றிடம் நோக்கிச் செல்கின்றேன்” என அவன் வாயில்காவலனிடம் கூறிப் புறப்படும்பொழுது, "இதோகாண்; என் கலன்களையும், என் இசைக்கருவிகள் அடங்கிய பையினேயும் துரக்கிக்கொண்டேன்", "காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை" எனக் கூறியதையும் காட்டுவர்.

அரசன் ஒருவனை, ஒரு புலவர் பாடும் வழக்கம் தோன்றிய அக்காலத்திலேயே புலவர்கள், எக்குலத்தில் பிறந்தவராயினும், தங்களைப் பாண்குடியிற் பிறந்தாராகக் கொண்டு, பாணன் ஒருவன், அரசன் ஒருவனிடத்தில் சென்று, யாழ் இசைத்துப் பாடுவதைப் போல் பாடல் புனைவதையே கவிமரபாகக் கொண்டுவிட்டனர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் அந்தணர் மரபினர் என்று கூறியுள்ளார் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரையெழுதிய பேராசிரியர். அம் முட மோசியார் ஆய் என்ற வள்ளல் ஒருவனைப் பாடிய பாடல் ஒன்றில், விறலி பின்வர யாழ் இசைத்து அவனேப் பாடியதாகப் பாடியுள்ளார்.

          "வளைக்கை விறலிஎன் பின்ன ளாகப்
           பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் 
           வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப் 
           படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் 
           ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீ இப் 
           புகழ்சால் சிறப்பின்நின் நல்விசை உள்ளி
           வந்தெனென்".' . . . . . (புறம்: ௧௩௫)

வேளாளர் என்பதைக் குறிக்கும் கிழார் என்ற பட்டப் பெயருடைய அரிசில் கிழார் என்பவர், பேகனைப் பாடிய பாடல் ஒன்றில், "சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல, நன்னாடு பாட என்னை நயந்து" எனப் பாடியுள்ளார். அந்தணருள் ஒரு பிரிவினர் எனக் கருதப்படும்