பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 ஒளவையார்


யும், கொற்றவை போன்ற சிறுதெய்வங்களையும் வழிபடும் வழக்காறு, ஒளவையார் காலத்திலேயே தமிழகத்தில் இடம்பெற்று விட்டது. ஆகவே, தமிழர்கள் ஒவ்வொருவரும் இக் கடவுளரில் யாரையேனும் ஒருவரை வழிபடு தெய்வமாகக்கொண்டே வாழத் தொடங்கினர். ஒளவையார் இம் முறைக்கு மாறுபட்டவரல்லர்.

தமக்குப் பரிசில் அளித்த அரசர்களை வாழ்த்தியவிடத்தெல்லாம், 'காவிரி எக்கரிட்ட மணலிலும் பல நாள் வாழ்க’ ‘மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழ்க பலநாள்' 'பஃறுளி ஆற்று மணலினும் பல நாள் வாழ்க; 'தண்கதிர் மதியம் போலவும், ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னுக பெரும" எனப் புலவர் பலரும் இயற்கைப் பொருளே எடுத்துக் காட்டியே வாழ்த்தினர். நெடுநாள் வாழ உதவும் நெல்லிக்கனி ஒன்றைத் தமக்கு அளித்த அதியமானை வாழ்த்திய ஒளவையார் மட்டும் “நஞ்சுண்ட நீலகண்டனேப் போல் நெடிது வாழ்க"-"நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக! பெரும! நீயே" என்றே வாழ்த்தியுள்ளார். மேலும், கரும்பைத் தமிழகத்திற்கு முதற்கண் கொணர்ந்தோர் அதியமான் முன்னோராவர் என்று கூறியவிடத்து, அக் கரும்பு "அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்னது" என்றும், அவற்றை அவன் முன்னேர், "அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்" வழிபட்டுக் கொணர்ந்தனர் என்றும் கூறியுள்ளார். போர்க்களத்தில் வீரப்புண் பெற்று வீழ்ந்து மடிந்தார் வீரசுவர்க்கம் புகுவர் என்றும், அவ்வாறு போர்ப்புண் பெறாது இறப்போர் உண்டாயின், அவர்க்கும் அவ்விரசுவர்க்கம் கிடைக்குமாறு இறந்த அவர் உடலைத் தர்ப்பைப்புல்மீது கிடத்தி, வாளால் வெட்டிப் புதைப்பர் என்றும்,

           "ஒடல் மரீஇய பீடில் மன்னர்
            நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
            காதல் மறந்து அவர் தீதுமருங்கு அறுமார்
            அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்.