பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒளவையார் வரலாறு 13


               திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
               மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
               நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்க என 
               வாள்போழ்ந்து அடக்கலும்," (புறம்:  ௯௩) 

உயிர்களுக்கு வாழ்நாள் வரையறுக்கப்பட்டுளது: அவ் வரையறை தவறாது, கூற்றுவன் உயிர்களைக் கொண்டு செல்வன்; அவ் வாழ்நாள் முடியும் நாளன்று வெண்கடுகுப் புகையெழுப்பித் தடுப்பினும் அவன் தவருது கொண்டு செல்வன் என்றும்,

              "ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
              உறுமுறை மரபில் புறம்நின்று உய்க்கும் 
              கூற்றம்,"                   (புறம்: ௯அ) 

வைதீக முறைகளை விளங்க எடுத்துக் கூறியுள்ளார். உலகம் நிலையாமை உடைத்து,

              "நாகத் தன்ன பாகார் மண்டிலம்
               தமவே ஆயினும் தம்மொடு செல்லா 
               வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்.'
                                           (புறம்: ௩௯௭)

மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம், பார்ப்பார்க்குப் பூவும் புனலும் சொரிந்து பொன்தானம் புரிதல்வேண்டும்.

              "ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் 
               பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து" 
                                          (புறம்: ௩௪௭)

உயிர்க்கு ஊறு வந்துழி, நல்வினையே நற்றுணையாம். "வாழச்செய்த நல்வினையல்லது ஆகுங்காலைப் புணை பிறிதில்லை"; அந்தணர் செந்தீ வளர்ப்பர், "ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீ" என்ற கருத்துக்களையும் ஏற்றுக் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் கொண்டு நோக்கியவிடத்து, ஒளவையார், சிவனை வழிபடுகடவுளாகக்கொண்ட வைதீகச் சமயச் சார்புடையார் என்றே கொள்ளுதல் வேண்டும்.