பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

*14 ஒளவையார்


3) அவர் வாழ்நாள்:

ஆண்டாலும், அறிவாலும் முதிர்ந்த ஒரு பெண் மகளைச் சுட்டுவதற்காகவே ஒளவையார் என்ற சொல்லைத் தமிழ்மக்கள் ஆளுகின்றனர். ஆதலின் ஒளவையார் நெடுநாள் வாழ்ந்தவர் என்பதைக் கூறத் தேவையில்லை. தான் நெடுநாள் வாழ்ந்ததாகவும், அதற்குக் காரணம் அதிகமான் அளித்த கருநெல்லிக்கனியே என்றும் அவரே கூறியுள்ளார்.

          "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
           ஆதல் நின்னகத்து அடக்கிச் 
           சாதல் நீங்க எமக்குஈத் தனையே" 
                                        (புறம்: ௯க)

அவர் இறவாது என்றும் இருக்கச்செய்தது என்பதல்ல இச் சொற்றொடர் அளிக்கும் கருத்து; அந்நெல்லிக்கனி உண்பதற்கு முன்னர், அவர் ஆண்டு நிரம்பித்தளர்ந்த உடலினராகி யிருத்தல்வேண்டும். அவர் உடல் பேணப் டாது விடப்படின், அவர் இறப்பு விரைவில் எய்துவதாகத் தோன்றியிருத்தல் வேண்டும். ஆகவே, அதைத் தடுக்க யாதேனும் செய்தாகல் வேண்டும் என எண்ணிய அதிகன், அவ்வாற்றல் வாய்ந்த அருமருந்தாயது, அந்நெல்லிக்கனியே என உணர்ந்து அதைக் கொணர்ந்து அவர்க்குத் தந்தானாதல் வேண்டும்; அதனுல் அவர் அன்றே மறைவது நீங்கி, மேலும் பலநாள் வாழ்ந்து, பாடல் பல புனைந்து, தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்வித்தாராதல் வேண்டும். இவ்வாறு அண்மையில் சேர இருந்த சாவை நீக்கி நெடுநாள் வாழச்செய்ததன்றிச், சாவே இன்றி வாழச் செய்தது என்பதன்று.

நெடுநாள் வாழ்ந்த ஒளவையார், தம் வாழ்நாளின் பிற்பகுதியிலேயே பாடல்புனையப் பழகினாரல்லர், இளமையிலிருந்தே இன்கவி புனைவதில் ஈடில்லாதிருந்தனர் என்பதற்கு அவர் பாடல்களிலேயே சான்றுகள் உள. உங்கள் நாட்டில் பொருநரும் உளரோ?” என அரசன் ஒருவன் கேட்டதாகவும், அதற்குத் தாம் விடையளித்ததாக