பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு 19

வாழ்ந்தவரே; ஒருவர் பிறந்த காலத்தை ஆண்டு, திங்கள், நாள், நாழிகை, ஓரை தவறாமல் குறிக்கும் இயல்பினராய தமிழர், ஒளவையார் போன்ற பெரும்புலவர் பிறந்த நாட்களைக் குறிக்காது விட்டது வியப்பினும் வியப்பே.

(7) அவர்காலத்துப் புலவர்:

ஒளவையார் வாழ்ந்த காலம், சங்ககாலம் என்பதை அறிந்தோம்; சங்ககாலம் என்பது ஒளவையார் காலத் திற்கு முன்னும் பின்னுமாகச் சில ஆண்டுகளைக்கொண்ட கால எல்லையைக் குறிப்பதாகும்; ஆகவே, அச் சங்க காலப் புலவர் அனைவரையும், ஒளவையார் காலத்தின் வாழ்ந்தோராகக் கொள்ளுதல் பொருந்தாது; சிலர் அவருக்கு முற்பட்ட காலத்தும், சிலர் பிற்பட்ட காலத்தும், சிலர் அவரோடு ஒத்தகாலத்தும் வாழ்ந்திருத்தல் வேண்டும். ஒளவையார் பாராட்டைப் பெற்ற அரசர்கள் யார்? அவ்வரசர்களைப் பாராட்டிய புலவர்கள் யார் என்பனவற்றைக் கொண்டு நோக்கியவிடத்து, கபிலர், பரணர், பெருஞ்சித்திரனர், அரிசில்கிழார், ஐயூர் மூலங்கிழார், ஒருசிறைப்பெரியனார், உலோச்சனர்,மோசிகீரனர்,மருதன் இளநாகனர், கருவூர்க்கதப்பிள்ளை, வடமவண்ணக்கன், பெருஞ் சாத்தன், அஞ்சி அத்தைமகள் நாகையார் முதலாய புலவர் பெருமக்கள் ஒளவையாரோடு, ஒருகாலத்தே வாழ்ந்தவர். எனக் கொள்ளுதல் கூடும். இவருள் கபிலரும், பரணரும், வெள்ளிவீதியாரும் காலத்தால் ஒளவையாருக்குச் சிறிது முற்பட்டவர் என்பதை, அவர் பாடல்களைப் பயின்றார் அறிவர்.

(8) குணநலம்:

                      க) வறுமையிற் செம்மை

'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்றார் பிற்காலப் புலவர் ஒருவர். புலவர்கள் பொருளால் வறியரே என்றாலும்,

            "பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
             சுருக்கத்து வேண்டும் உயர்வு"   (திருக்குறள்:௯௪௩)