பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 ஒளவையார்

என்ற மான உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுப்பவர்; பேரரசர்களையும், குறுகில மன்னர்களையும் பாடினார்கள் என்றால், அவர்கள் அளிக்கும் பரிசில் ஒன்றே கருதிப் பாடினாரல்லர்; பரிசில் பெறுவதற்காக என்றே அவர்பால் இல்லாதன எல்லாம் ஏற்றிக் கூறிப் போற்றினாரும் அல்லர்: "கொடுக்கிலாதானைப் பாரியே” எனக் கூறிப் பாராட்டிப் பரிசில் பெறும் பண்பு, அவர்பால் காணல் அரிது. மேலும், தாங்கள் விரும்பிய பொருளை விரும்பிய அளவு அரசர்கள் அளித்தால் ஏற்பரேயன்றி, அரசர்கள் எது அளிப்பினும் எற்றுக்கொள்ளும் இழிகுணம் உடையாரல்லர்; அன்றியும், அரசர்கள் விரும்பாது அளிப்பன எவ்வளவு பெரியன ஆயினும், அவற்றை ஏற்றுக்கொள்வாரல்லர். இவ்வியல்பு புலவர்தம் பெருமைக்குரிய பண்பாடுகளாம். அவ்வியல்பு ஒளவையார்பாலும் அமைந்திருந்தது எனக் கூறத்தேவையில்லை. அதியமான் தலைவாயில் நின்று, தடாரிப்பறை ஒலித்துத் தன் வரவு உணர்த்திச் சிறிது, காலை நின்று பார்த்தனர் ஒளவையார்; அவன் ஆங்கு விரைந்து வந்திலன்; அதுகண்ட ஒளவையார் சினங் கொண்டு அவ்வாயில் காவலனே நோக்கி,

            "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" 

எனக்கூறி எழுந்த அவ்வுரை, ஒளவையார் தம் வறுமையிற். செம்மையாம் பண்பை வகுத்துரைப்பது காண்க.

(உ) தன்னடக்கம்

ஒளவையார் இவ்வாறு சினந்து கூறிச் செல்வது, அவர்தம் செருக்கினே உணர்த்துவதாகாது; ஒளவையார் அடக்கமே உருவானவர்: "பரணர் பாராட்டைப் பிறர் பெறுதல் அரிதினும் அரிதே' எனப் பரணர் தம் புலமையைப் பாராட்டிப் பரவும் ஒளவையார், தம் பாட்டின் தன்மை குறித்துக் கூறுவன, அவர்தம் அடக்கத்திற்கு, அரண் செய்வதாகும். "பணியுமாம் என்றும் பெருமை"' 'பெருமை, பெருமிதம் இன்மை" என்பர் வள்ளுவர்: கல்விக் கழகு கற்றுணர்ந்து அடங்கல் அன்றோ இவ்