பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

ஒளவையார்

பெரு வீரன்; பகைவர் படை கண்டு மனம் புழுங்குகின்றான்; உதட்டைக் கடித்துக் கொள்கிறான்; கையில் எந்திய வேலைப் பல வகையானும் சுழற்றிச் சுழற்றி அதன் வன்மையைக் காண்கிறான்; இறுதியில் அவனுக்குப் படைத் தலைமை கிட்டிற்று. படையைச் செலுத்திக் கொண்டு போர்க்களம் புகுந்தான்; தன் படைநோக்கி வரும் பகைவர் படையைச் சிதற அடித்து, இடைவெளி உண்டாக்கிப் பெரும் போரிட்டுக் கொண்டிருக்கிறான்; பகைவர் பலர் ஒன்று சேர்ந்து, அவன் ஒருவனைத் தாக்கினர் ; அவன் உடலெங்கும் வீரப்புண்கள்; உருத் தெரியாமல் அழிந்தது அவன் உடல்; இறந்து வீழ்ந்தான் அவனும்; இச் செய்தி எட்டிற்று அவன் தாய்க்கு.

அவளோ, தோள் தளர்ந்து, தலை நரைத்த கிழம்: அவள், அச் செய்தி கேட்டவுடனே, அவனைப் பெற்றஞான்று பெற்றிருந்த உடற்கட்டும் உள்ள மகிழ்ச்சியும் கொண்டாள் என்ற வீர நிகழ்ச்சியை விளங்க உரைத்துள்ளார் ஒளவையார். அப்பாட்டில், அவ் வீர இளேஞனைச் “சிறப்புடையாளன்," "மாண்புடையாளன்' என்றெல்லாம் பாராட்டியதோடு நில்லாமல், அவன் தாயை நமக்கு அறிவிக்கும் முறையின் அழகே அழகு! போர்க்களத்தே முன்வைத்த காளைப் பின் வைத்தல் பேடித்தனம் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஆண்டகையின் தாய் அவள் என்று, அவ் வீரமகனை முன்காட்டி, அவனைப் பெற்ற பெருமைக்குரிய தாய் எனப் பின்னர் அவளை அறிமுகம் செய்து வைக்கிறார்; ஒளவையார்தம் வீரம் என்னே! அவர் எழுத்தும் சொல்லும் எடுத்தூட்டும் வீர உணர்ச்சியுந்தான் என்னே ! என்னே !!

     "கடல் கிளர்ந் தன்ன கட்டுர் நாப்பண்.
      வெந்து,வாய் மடித்து, வேல்தலைப் பெயரித், 
      தோடுஉகைத்து, எழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின் 
      வருபடை போழ்ந்து, வாய்ப்பட விலங்கி, 
      இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய 
      சிறப்புடை யாளன் மாண்புகன் டருளி