பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒளவையார் வரலாறு

25

தலைவன் பிரிவால் நேர்ந்த தனிமை, தலைவியைப் பெரிதும் வருத்துவதாயிற்று; எப்பொருளிடத்தும் வெறுப்பு ; சோறுண்ணும் உணர்வே அற்றுப்போய்விட்டது. அதனால் உடலும் மெலிந்தது: உடல்மெலியவே, உயிரும் மெலியலாயிற்று; அழகும் இளமையும் அழியத்தொடங்கின: இவ்வாறு அவர் பிரிவால் வருந்தி அழிவதினும், அவரைச் சென்றடைய, அவர் சென்ற கொடிய காட்டுவழியே அலைந்து திரிவதையே விரும்புகின்றேன் என்கிறாள் தலைவி; அத் தலைவியின் துயர்தோன்ற ஒருபாடலைப்பாட எண்ணிய ஒளவையார் உள்ளத்தே, கணவனை இழந்து கலங்கும் வெள்ளிவீதியார் உருவம் காட்சியளிக்கத் தொடங்கிற்று; உடனே, "நெறிபடு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளிவீதியைப் போலநன்றும், செலவுஅயர்ந் திசினால் யானே.” (அகம்; க௪எ) என அத் தலைவியின் வாயில் வைத்துத், தம்மோடொத்த பெண்பாற் புலவர் ஒருவர்க்கு நேர்ந்த இன்னலையும், அதுகுறித்துத் தம்மனத்திடைத் தோன்றிய இரக்க உணர்வையும் ஒருங்கே வெளியிடுவாராயினர்.

பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பெருமை வாய்ந்தவர் பரணர்; அவர் ஒருவரைப் பாராட்டினார் எனில், அப் பாராட்டைப் பெற்றவர், உண்மையில் சிறப்புடைப் பெருங்குணங்கள் பலவற்றைப் பெற்றவராகவே இருத்தல் வேண்டும்; இவ் வுண்மையை அறிந்து கூறியுள்ளார் ஒளவையார்; "புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்" என்பர் பெரியோர்; பரணர் ஒரு பெரும் புலவர்; ஒளவையாரும் ஒரு பெரும் புலவரே; ஆகவேதான், பரணர் பெருமை அறிந்து பாராட்ட முடிந்தது; அதியமானைப் பாடினார் ஒளவையார்; ஒரு பாட்டால் அன்று: பல பாடல்களால்; அவன் பெருமையுடையோன் என்பதை விளக்க அஃதொன்றே போதும்: ஆனால் அஃது ஒளவையார்க்கு அமைதி தரவில்லை; அதியமான் புகழை மேலும் மிகுத்துக்கூற விரும்புகிறார், அதற்கு, அவன் தன் சிறப்புடைக் குணங்கள் பலவற்றை மேலும் தொகுத்துக் கூறுவதற்குப் பதிலாக, 'அதிய