பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஒளவையார்

மானே! நின்னைப் பரணரும் பாடியுள்ளார்- 'இன்றும் பரணன் பாடினன்'.-எனின் நின்பெருமைக்கு ஓர் எல்லை கூறல் இயலுமோ" என்று கூறி, அதியமான் புகழ் பாடுவார்போல் பரணர் புகழைப் பாராட்டியுள்ளார்.

ஒளவையார் அறிய வாழ்ந்த பெரும் புலவர்களுள் கபிலரும் ஒருவராவர். கபிலர் முல்லைக்குத் தேர் ஈந்த, வள்ளியோனான பாரியின் உயிர் நண்பர்; பாரி, பறம்பு மலைக்குரியோன்; படையாலும், கொடையாலும் புகழ் பெருக வாழும் அவன் வாழ்வு காணப்பொறாத மூவேந்தர், அவனே வென்று அழிக்க எண்ணினர், பறம்புமலையைச் சூழ, யானையும் தேரும் கொண்டு முற்றுகையிட்டனர்; முற்றுகை நெடுநாள் தொடர்வதாயிற்று; பறம்பு இயற்கை வளத்தில் இணையற்றதே எனினும், அஃதொன்றையே நம்பியிருத்தல் கூடாது என எண்ணினார் கபிலர்: உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதன்றோ நட்பு? கிளிகள் பலவற்றைப் பிடித்துப் பழக்கினார்: காலையில் மலையரண் கடந்து வெளியே காவதம் பல கடந்து சென்று, ஆங்கே காய்த்துக் கிடக்கும் செந்நெற் கதிர்களைக் கொண்டு மாலையில் மீளப் பணித்தனர்; அவையும் அவ்வாறே செய்தன; அதனுல் அரணில் உள்ளார்க்கு வேண்டிய உணவுப்பொருள் கிடைப்பதாயிற்று; மூவேந்தர் முற்றுகை பயனற்றுப் போயிற்று; கபிலர்தம் இத்தொண்டு எவராலும் எளிதில் மறக்கக் கூடியதன்று எனின், செயற்கருஞ்செவல் செய்த பெரியோர்களைப் பாராட்டுவதையே பண்பாகக் கொண்ட ஒளவையாரால், இந்நிகழ்ச்சி மறக்கக் கூடியதாமோ? ஏற்ற இடத்தில், இவரும் பணியினை எடுத்துக் கூறிக் கபிலரை, நாவார மனமார வாழ்த்துகின்றனர்.

பொருள்வயிற் பிரிந்து சென்றுள்ளான் தலைவன். தனித்துத் துயரட வருந்து தலைவிக்கு அவள் நெஞ்சம், "நிற்பாரல்லர் நம் தலைவர்; நீ மகிழ விரைவில் மீள்வர்" எனக்கூறித் தேற்றுகிறது; அவ்வாறு கூறும் தன் நெஞ்சை நோக்கி அவள் கூறுகிறாள்: 'ஏ! மடசெஞ்சே! தலைவர்