பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

27

வந்துவிடுவார்; தலைவர் வந்து விடுவார்' என வாய் ஒவாது கூறுகின்றனேயே, நினக்கு அறிவு இருக்கிறதா? பாரியின் பறம்புமலைக் குருவிகள், காலையில் சென்று கதிர்களைக் கொண்டு மாலையில் மீளுகின்றனவே, அப்படி இவரும் காலையில் சென்று மாலையில் மீள்வர் என்றா நினைக்கிறாய் ? அவ்வாறு கினேக்காதே; அவர் வாரார்" என்று இவ்வாறு உரைக்கும் தலைவியின் கூற்றிலே வைத்துக் கபிலரைப் பாராட்டியுள்ளார் ஒளவையார்,

“............ பாரி பறம்பின் நிரைபறைக் குரீஇயினம், காஃப் போகி, முடங்குபுறச் செங்கெல் தரீஇயர் ஒராங்கு இரைதேர் கொட்பின வாகிப் பொழுது படப் படர்கொள் மாலைப் படர்தங் தாங்கு - வருவர் என் றுணர்ந்த மடங்கெழு நெஞ்சம்' (அகம்:௩0௩)

(௫) அவர் பெருமை

ஒளவையார், முடியுடை மூவேந்தர்களாலும், வேறு பல குறுநில மன்னர்களாலும் நன்கு மதிக்கப்பெற்றவர்; அதியமானால் அரசியல் தூதுவராக அனுப்பப்பெறும் அளவு மதிக்கப்பெற்றவர்; ஒளவையார் வழிவந்தோர் அனைவராலும், கல்வியறிவும் கடவுள் அன்பும் உடைய ஆண்டால் முதிய அம்மையார் எவர்க்கும் ஒளவையார் என்ற தம் பெயரே இட்டு வழங்கும் அளவு பெயர்போன பெருமையுடையார் ஆவர். மேலும் யாப்பருங்கலவிருத்தி உரையாசிரியர், "பெருஞ்சித்திரனார் செய்யுளும், அவ்வையார் செய்யுளும், பத்தினிச்செய்யுளும் முதலாக உடையன எல்லாம் எப்பாற்படும் எனின், ஆரிடப்போலி என்றும், ஆரிட வாசகம் என்றும் வழங்கப்படும் என்க. இவைகள் எல்லாம், இருடிகள் அல்லா ஏனேயோராகி மனத்தது பாடவும், ஆகவும், கெடவும் பாடல் தரும் கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலைச்சாத்தனார் இத்தொடக்கத்தோராலும், பெருஞ்சித்திரனார் தொடக்கத்தோராலும் ஆரிடச் செய்யுட்போல மிகவும் குறையவும் பாடப்படுவன