பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஒளவையார்

எனக் கொள்க" எனக் கூறுவதை நோக்கின், அவ்வுரையாசிரியர் காலத்திலேயே ஒளவையார் தெய்வத்தன்மை உடையவராகப் பெருமைப்படுத்தப் பட்டுள்ளார் என்பது தெளிவாம்.

(௬) அவர் உள்ளம்

தமிழரசர்கள், தங்கள் காட்டில் வாழ்வோர் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வம் காட்டினார்களோ, அவ்வளவு ஆர்வத்தைப் பகைவர்நாட்டில் வாழ்வோரிடத்திலும் காட்டினாரல்லர்; தங்கள்நாட்டில் வாழ்வோரை மக்களாக எண்ணியதைப்போன்று பகைவர் காட்டில் வாழ்வோரையும் எண்ணினரல்லர் அந் நாட்டு அரசன்பால் கொள்ளும் வெறுப்பு, அவன் காட்டின் வாழ்வோரும் மக்களே என்ற உணர்வை மறைத்துவிடும் போலும் அதனால் பகையரசனப் போரில் வெற்றி கொள்வதொடு அமையாது, நெல்லும், கரும்பும் விளைந்து சிறக்கும் நன்செய் வயல்களையும், மாடங்களும், மன்றங்களும் நிறைந்து நாகரிகத்தின் இருப்பிடமாய் விளங்கும் நகரங்களையும் கொண்ட அவன் காட்டை அழித்து, அவ்விடங்களில் கழுதை ஏர்பூட்டி உழுது, எள்ளும் கொள்ளும் விதைத்து, அந் நாட்டில் வாழ்வோர்க்கு வற்றாத துன்பம் விளத்தலையும் வழக்கமாகக் கொண்டார்கள் அக்கால அரசர்கள்; அவ் வழிவுக் காட்சியைப் புலவர்கள் பலமுறை கண்டு, மனம் மிக நொந்து, கண்ணீர் விட்டுக் கலங்கியும் உள்ளார்கள் அத்தகைய புலவர்களுள் ஒளவையாரும் ஒருவர்.

தம்மிடம் அன்புகாட்டி ஆதரிக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியின் காலத்திலும் அத்தகைய நாடழிவு நடைபெற இருந்தது. அதியமானும், அவன் பகைவரும் ஒருவருக்கொருவர் பணிந்து போகாமையால், போர் தொடங்கும் நிலை உண்டாகிவிட்டது. அதுகாண, ஒளவையார்தம் அருள் உள்ளம் அல்லற்படத் தொடங்கிற்து. பகைவர் நாட்டையும், அந்நாட்டு வளத்தையும் பார்த்து மகிழ்ந்தவர் ஒளவையார்: அந்நாட்டு வயல்களில் விளைந்து