பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஒளவையார்

வாய்ந்த இடங்களை, அதன் ஆற்றலுக்குட்பட்டுத் தாம் மாறிவிடாமல் தம்வழி அவ்விடங்களை மாற்றுவதே ஆண்மையும், அறிவும் உடையோர் செயலாம்.

"இசையாது எனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை" (நாலடியார்: ௧௯௪)
"சென்ற விடத்தாற் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு" (திருக்குறள்:௪௨௨)

வாழும் மக்கள் அனைவரும் அத்தகைய அறிவும், ஆண்மையும் உடையராயின், அப்போது அவர் வாழும் நிலத்தின் இயல்புபற்றிக் கவலை கொள்ளவேண்டியதில்லை; இரும்பு பொன் ஆகிய இரண்டனுள், இரும்பு இடத்திற்கேற்ப மாறும் இயல்புடையது; ஈரம்பட்ட இடமாயின், துருப்பிடிக்கும் இயல்பினது; ஆகவே, அதற்கு ஏற்ற இடம் எது எனக் காணவேண்டுவது இன்றிமையாததே: பொன், எவ்விடத்தில் இடப்படினும், இயல்பிற் குன்றுவதில்லை; ஆகலின் அதற்கு இடத்தின் இயல்புபற்றிக் கவலைகொள்ள வேண்டியதின்று; ஆகவே, வாழ்வோர் நல்லவராயின், அவர் வாழும் இடம் அவர் வாழ்வதற்குமுன் எத்துணைத் தீயதாயினும் நன்றாகிவிடும்; அவ்வாறின்றி வாழ்வோர் தீயராயின், அவர் வாழும் இடம், அதற்கு முன்னர் எத்துணைச் சிறப்புடையதாயினும் தீதாகிவிடும்.

"இல்லதுஎன் இல்லவள் மாண்பானால்? உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை?” (திருக்குறள் :௫௩)

என வள்ளுவரும் வினவுவது காண்க.

ஆகவே, நிலம், காடும் மலையும் காட்டாறும் சேர்ந்து பாழ்பட்ட நிலமாக இருப்பினும், அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டுவதின்று; அந்நிலத்தில் வாழச்சென்றோர், அறிவும் முயற்சியும் ஆண்மையும் உடைய நல்லோராயின், அந்நிலம், நன்னிலமாய் மாறி நின்று மாண்புறும் என்ற இக்கருத்தை உட்கொண்டே ஒளவையார், நிலத்தைப் பற்றிக் கூறுவார்போல் "நிலமே! நீ, நாகரிகத்தின் வாழ்விடம் எனக் கருதப்படும் நாடாகவாவது இரு அன்றிக்