பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஒளவையார்

என்று பிறரும் கூறுவதைப்போல், எல்லாம் உங்கள் கையில் இருக்கும்; இடத்தால் ஒன்றும் இல்லை என்று ஒளவையார் கூறிய அறிவுரைகள், அனைவரும் ஏற்றுப் போற்ற வேண்டியதொன்றாம்.

(9) அவர் பாடிய அகத்துறைப் பாடல்கள்:

அகமே புறம், புறநிகழ்ச்சியெல்லாம், அகநிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே நிற்கும். ஆகவே, புறவாழ்வு திருந்தியதாக இருத்தல்வேண்டும் என விரும்புவோர், தம் அகவாழ்வைத் திருந்திய ஒன்றாக ஆக்கிக் கொள்ளுதல்வேண்டும். அகவாழ்வு, மனைவி மக்களோடு வாழும் இல்வாழ்க்கை, புறவாழ்வு, ஊராரோடும் உலகத்தாரோடும் உறவாடும் உலக வாழ்வு; வாழ்வில் அமைதி வேண்டின், இவ்விரு வாழ்விலும் அமைதி காணல் வேண்டும். யாண்டு பலவாகியும் நரையின்றியிருப்பது யாங்ஙனம் என்று கேட்டவர்க்கு, "என் மனைவியும், மக்களும் நிரம்பிய அறிவினர்"-"மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்'-எனத் தன் அகவாழ்வில் அமைதி காண்பதற்கான காரணத்தை முதற்கண்கூறி, "என் இளையரும் என் சொற்படி நடப்பர்; வேந்தனும் அல்லவை செய்யான்; என் ஊரில் சான்றோர் பலர் வாழ்கின்றனர்."

"யான்கண் டனை யர்என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே." (புறம்: க.க.க)

எனத் தன் புறவாழ்வில் அமைதி காண்பதற்கான காரண தைப் பின்னர்க் கூறினார் புலவர் ஒருவர். புறவாழ்வினும், அகவாழ்வே திருந்திய வாழ்விற்கு வழிகாட்டும் என்பதைக் கண்ட புலவர்கள், தமிழர் தம் அகவாழ்வு திருந்தவேண்டும் என்பதிலே மிக்க கவலை கொள்வாராயினர்; அதற்கு அவர்கள் கையாண்ட முறை தான் அகத்திணைப் பாடல்கள்; ஆடவரிற் சிறந்தான் ஒரு