பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஒளவையார்

இமயமலையையும் இடம் பெயர அசைக்கும் ஆற்றல் வாய்ந்தோய்; அத்தகைய பேராற்றல் வாய்ந்த நீ தனித்து வந்தாவது வருத்துகின்றனையா? உயர்ந்த மலையில் வாழும் பாம்பும் கேட்டாலே இறந்துபோகும் பேரிடியொலி ஒருபால், அவ்விடியோசையை விரைந்து இழுத்துக்கொண்டு எங்கும் சுழன்றடிக்கும் சூறாவளி ஒருபால், ஆக இவற்றின் துணை கொண்டுவந்து தாக்குகின்றனை இவ்வளவு பெரும்படை சேர்த்துக்கொண்டு, ஆதரவற்றுத் தனித்துத் துயருறும் என்னை வருத்துகின்றனை; இயல்பாக நிறைந்த இரக்கத்தை உடையாய் நீ என்று கூறுவரே! அவ்விரக்கத்தை இப்போது நீ இழந்து விட்டாயோ?”

"நெடும்வரை மருங்கின் பாம்புபட இடிக்கும். கடுவிசை உருமின், கழறுகுரல் அளைஇ, காலொடு வந்த கமஞ்சூல் மாமழை! ஆர்அளி இலையோ? நீயே, பேரிசை இமயமும் துளக்கும் பண்பினை; துணைஇலர்; அளியர்; பெண்டிர்; இஃது எவனே?"

என்று தன் உள்ளத்துயரை ஒருவாறு உணர்த்தினாள்: இவ்வாறு மழையும் பிறவும் வருத்துவது, நாம் தனித்துறைதலால் அன்றே? தலைவரின் நீங்கித் தனித்து வாழாது கூடி வாழத் தொடங்கிவிடின், இவை நம்மைத் துயர் உறுத்தா; ஆதலின், அவரோடு உடனுறை வாழ்வை வேண்டுகிறேன்,” என்று துணிகிறாள்; துணிந்த அவள், தலைவன் களவு வாழ்க்கையையே பெரிதும் விரும்பும் இயல்பினனாதலின், அதை மறுத்தல் வேண்டும் என்று எண்ணி, களவொழுக்கைக் கைவிட்டுக் கடிமணம் செய்துகொள்ள விரும்பி, களவு வாழ்க்கையில் அவனுக்கு அரியள் ஆயினள். இதனால் அவனுள்ளம் வாடிற்று.

அவள் தனக்குக் கிடைத்தற்கரியள் என்பதை அவன் உணர்ந்தானெனினும், அவன் நெஞ்சம், அவள்பால்: கொண்ட ஆசையை மறக்க மறுக்கிறது; மறுக்கும் தன் நெஞ்சை கோக்கி அவன் கூறுகிறான்: "அவளோ கிடைத்தற்கரியளாய்க் காணுகிறாள்: அவள், உன் ஆசையறிந்து