பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

37

நடந்துகொள்பவளாய்த் தோன்றவில்லை; ஆனால், அவள் பால் நீ கொள்ளும் ஆசையோ அளவிடற்கரியது; கிடைத்தற்கரிய பொருள் ஒன்றின்மீது அளவிடற்கரிய ஆசை கொள்வதால் யாது நேரும்? அதைத் தாங்கும் ஆற்றல் நினக்கு உண்டா இறுகிய கல்நெஞ்சமன்று நீ: இளகிய ஈர நெஞ்சு நீ; அவ்வாசையும் நிறைவேறாது; அதை மறவாது போயின், நீயும் இடிந்து போவாய்; ஆகவே, அவள் பால் கொண்ட அந்நினைவை அறவே மறந்துவிடு.” இவ்வாறு அறிவுரை கூறும் அவன், தாங்கும் ஆற்றல் அற்ற தன் நெஞ்சம், அரிய பொருள்மீது ஆசை கொள்வதைப் பசுமட்கலத்தில் பெயல்நீர் ஏற்கும் மதியிலார் செயலோடு ஒப்பிட்டு, "நெஞ்சே! பச்சை மண்ணால் செய்யப் பெற்று, கரம் புலராத கலத்தில் பெய்யும் மழைநீரைப் பிடித்துவைக்க முயல்வார் யாரையேனும் கண்டதுண்டா? பிடித்துவைப்பராயின், அந்நீர், அதன்கண் நில்லாது ஒடிவிடுதலோடு அக் கலத்தையும் அழித்துவிடும் என்பதை அறிவர்; ஆகவே, அறிவுடையோர் யாரும் அவ்வாறு செய்யார் ; நீ அத்தகைய செயலைச் செய்யத் துணிகிறாய்; என்னே நின் பேதைமை!" என அறிவுரை கூறுவதாக ஒளவையார் கூறும் திறம் கண்டு மகிழ்தற்குரியதாம்.

"பெயல்நீர்க் குஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிதுஅவா வுற்றனே நெஞ்சே!”

இவ்வாறு உள்ளம் வாடிய அவனும், இறுதியில் அவளோடு உடனுறைவாழ்வை விரும்பினான்; விரும்பினான் ஆயினும், அவளைக் கொடிய காட்டுவழியே அழைத்துச் செல்ல அஞ்சினான்; கோடையின் கொடுமையை அவள் ஆற்றாள் என எண்ணிக்கொண் டுடன்சேறற்குத் தயங்கினான்; தயங்கிய அவனுள்ளம் அறிந்தாள் தலைவியின் உயிர்த்தோழி; அவள் அறிவே உருவானவள்; அவள் தலைவனே அணுகி, "அன்புடையீர்! விரைவில் வாடும் மென்மை உடையதே குவளை மலர் என்றாலும், அது வளர்ந்திருக்கும் பாத்திகளில் நீர் கிறையக் கட்டப்பெற்