பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஒளவையார்

றிருப்பின் எதையும் வறட்டும், கோடைகாலத்தில் விசும் வறண்ட கொடுங் காற்றாகிய மேல்காற்றடிக்கினும் வாடாது வளம்பெறும்; அதைப்போல, தலைவி இயல்பால் மிகவும் மெல்லியளே என்றாலும், அவள் நின்னை நீங்கப்பெறாமல், நின்னோடு வருவாளாயின், அவளுக்கு உன் ஆரருள் இருக்கின்ற காரணத்தால், யானையும் வருந்தும் கொடுமையுடையதே எனினும், அக் கானம் கண்டு கலங்காள்; அக்கானமும் அவளுக்கு இனிக்கும்; ஆகவே, அவள் மென்மை கண்டு கைவிடாது, கொண்டுசென்று மணப்பீராக!" எனக் கூறினாள். அவனும், அவளைக் கொண்டுசென்று மணந்தனன்.

"நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை,

கோடை ஒற்றினும், வாடா தாகும்

யானே கைமடித்து உயவும்

கானமும் இனியவாம்; நும்மொடு வரினே.”

அண்மையில் மணம்கொண்ட மணமக்கள் அவர்கள்; இளமையின் இயல்பையும், இளமைக்கால இன்பத்தின் அருமையும் அறிந்தவர் ; இன்பமும், இளமையும் இருந்து வாழாது, கழியும் இயல்பின; இளமைக்கால இன்பத்தினும், சிறந்த இன்பம் வேறு இல்லை: இளமை கழிந்தவழி, வாழ்வு அவர்க்கு இன்பம் தருவதும் இல்லையென்ப; இவ் வுண்மைகளை அறிந்தவர்கள்; அவர்கள், ஒருவர்பால் ஒருவர் கொண்டிருக்கும் அன்போ, வான்போல் வளர்ந்துள்ளது; ஆகவே, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து வாழ்வதோ இயலாது. அதை அவர்களும் விரும்பார்; ஆகவே, பிரியாது வாழவே விரும்புகின்றனர். எனினும், அவர்கள் உலகியலோடு மாறுபட வாழும் மாண்பிலர் அன்று; உலகியலோ, வினேமேற்சென்ற மனத்தினராய், வேண்டிய பொருள் சேர்ப்பதையே ஆடவர், தம் பண்பெனக் கொள்ளுதல் வேண்டும் என்று அறிவிக்கிறது; இதையும் அறிந்தவர்கள் அவர்கள் ஆதலின், அவன் ஒருவாறு தேறி, பொருள் வயிற்பிரிய எண்ணுகிறான் , பிரிந்தான் : பொருள் சேர்த்