பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

39

தான்; மீண்டும் வந்து சேர்ந்தான்; வந்த அவனை நோக்கி, அவளும் அவள் தோழியும் வினவுகிறார்கள், "சென்ற விடத்து எங்களைப்பற்றிய எண்ணம், எப்போதாயினும் வந்ததுண்டோ?" என்று. அதற்கு அவன், "எப்பொழுதும் உங்கள் நினைவேதான்; உங்களை நினைக்குந்தோறும் செயல்படுமனத்தராய்ச் செய்பொருட்கு அகல்வதே ஆடவர் பண்பு என அறிவுரை கூறிப், பிரிதற்கறியராகிய உங்களைப் பிரியுமாறு செய்த இவ்வுலகியலே நொந்துநொந்து என் அறிவும் மயங்கினேன்", என்று விடைகூறி மகிழ்வித்தான் என்று, அவ் விளங்காதலர்களின் வரலாறு கூறுவார்போல், மனைவியர்பால் மாறா அன்பும் கொள்ளுதல்வேண்டும். அதே நிலையில் அவரோடு இடைவிடாது பிரிதலின்றி வாழ்தல் வேண்டும் என்று எண்ணாமல், உலகியலோடு ஒட்டிப் பிரிந்து சென்று, பொருள் தேடும் முயற்சியினையும் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்தி,

"மனைவிழைவார், மாண்பயண் எய்தார்; வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது."
                                                 (திருக்குறள்,௯0க) 

என்ற திருக்குறட்கு இலக்கியம் காட்டிய ஒளவையார் அறிவுரை அகத்தேற்று அறிவுகொள்ளற்குரியதாம்.

"உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி, நினைத்தனென் அல்லெனோ பெரிதே? நினைத்து மருண்டனென் அல்லெனோ உலகத்துப் பண்பே?"

தலைவனைப் பிரிந்து தனித்திருந்தகாலை, தலைவியின் உள்ள நிலையின் உயர்வையும், உறுதிப்பாட்டையும் விளக்க ஔவையார் கூறுவனவும் சிலவுள.

பொருள் தேடும் முயற்சியை முன்னிட்டுப் பிரிந்த தலைவன், தலைவியிடம் கூறிக்கொள்ளாமலே பிரிந்து போய் விட்டான்; அதுகண்டு வருந்துகிறாள் தலைவி அவளுக்கு ஆறுதல் கூற வருகிறாள் அவள்தோழி; வந்தவள், 'கூறாது பிரிந்து சென்ற அவர், உண்மையில் அன்புடையார் அன்று' என அவன்மீது பழிகூறத் தொடங்கி