பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஒளவையார்

னாள்; தன்முன், தலைவனைப் பழிப்பது காணப்பொறாள் தலைவி! உடனே, அவள் தன் தோழியை நோக்கி, "தோழி! அவர் அன்புடையர். ஆகவே, பிரியார் என்று தான் நானும் எண்ணியிருந்தேன்; ஆனால் உலகியல் அவரைப் பிரியச் செய்தது; அவர் பிரியுங்கால் அன்புடையராயின், கூறிப் பிரிந்திருக்கலாகாதா? என வினவுகிறாய்; அந்த உண்மையை நீ அறியாய்; தனித்திருக்க நான் ஆற்றேன்; அவர்பால் அத்துணை நிறையன்புடையேன்; இதை அவர் அறிவார்; ஆகவே, அவர் பிரிவுணர்த்தியிருப்பராயின், நான் அதற்கு உடன்படேன் என்பதையும் அவர் அறிவார். ஆகவேதான், கூறாது பிரிந்தார்: அன்பின்மையால் அன்று; அன்போடு கலந்த கடமையுணர்ச்சியால்;" என்று கூறித் தலைவனைப் புகழ்ந்தாள்.

"செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே."

பிரிந்துசென்ற தலைவன், விரைவில் வந்திலன்; அவன் கூறிச்சென்ற கார்காலமும் வந்துவிட்டது. எனினும், அவன் பிரிவுக்கு மனம் கலங்காது ஆற்றியிருக்கிறாள் தலைவி; அது, கற்புடை மகளிர்க்குக் கடன் எனக்கொண்டு ஆற்றியிருக்கும் அவளைக் கண்டு, "அவரைப் பிரிந்து, எவ்வாறு ஆற்றியுள்ளாய்?" என வினவுகிறாள் அவள்தோழி; அதற்குத் தலைவி கூறுகிறாள்; "தோழி! கார்காலம் தொடங்கியவுடனே, நம் தலைவர் சென்ற காட்டிலும், கொன்றை மலரும்; அக் கொன்றைமலரைக் கண்டவுடனே, கம் உடல் மறைத்துக் கொடுமை செய்யும் அவர் பிரிவால் உண்டாம் பசலைநோய், அவருக்கு நினைவு வரும் ; மேலும், தாம் செல்லும் இடந்தோறும், விலங்குகள் எல்லாம், பெண்ணொடு ஆண் கலந்து உறவாடும் காட்சியைக் காண்பரே அன்றி, பெண்ணவிட்டுப் பிரிந்து தனித்து வாழும் ஆண்விலங்கினைக் காணார்; பெண்ணொடு ஆண் கலந்து வாழ்வதை விலங்குகளும் விரும்பும் கார் காலத்தில், அறிவுடை ஆண்மகனாகிய அவர், என்னைப் பிரிந்துறைய நினையார்; பிரிந்து தனித்து வாழ அவரா