பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

41

லும் இயலாது; விரைந்து மீள்வர். இந்த உறுதியுள்ளமே என்னே ஆற்றியிருக்கச் செய்கிறது", எனத் தலைவன்பால் தனக்குள்ள, தளரா நம்பிக்கையை உணர்த்துகிறாள்.

"சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ,
நம்போல் பசக்கும் காலைத், தம்போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த, நெறிகோட்டு
இரலை மானையும், காண்பர்கொல்? நமரே."

“கார்காலம் தொடங்குவதற்கு முன்னரே வருவேன்" என்று தலைவன் சூளுரைத்துச் சென்றான்; கார்காலம் தொடங்கிவிட்டது; ஆனால், அவன் வந்திலன்; தலைவி, தான் உறுதி குலைந்து கலங்கத் தொடங்கினாள்; அந்நிலைக்கண், அவள் தோழி, "இது கார்கால மழையன்று; காலமல்லாக் காலத்துமழை; கார்காலம் இன்னும் தொடங்கப் பெறவில்லை" என்று பொய் கூறி அவளைத் தேற்ற முயலுகிறாள்; அது கண்ட தலைவி, "தோழி! மழைநீர் தாங்கி வரும் கரிய மேகங்கள் இடிக்கவும் தொடங்கிவிட்டன: மலையில் பெருமழை பெய்தும் விட்டது; வாடி வீழ்ந்து கிடக்கும் மலர்களை அடித்துக் கொண்டு அருவிகளும் பாய்ந்தோடத் தொடங்கிவிட்டன. அதோ காண்; ஆகவே, இது காலமல்லாக் காலத்து மழையன்று கார்கால மழையேயாம்," என்று கூறினாள். உடனே, தோழி, "கார்காலமாயின், தலைவர் வந்திருப்பாரே வந்திலரே! ஒரு வேளை வருவேன் என்று சூளுரைத்துச் சென்றது பொய்யோ?” எனக் கேட்டாள். அதற்குத் தலைவி, "இல்லை; இல்லை; வருவேன் என்று சூளுரைத்துச் சென்றார் என்பதும் பொய்யன்று: சூளுரைத்துச் சென்ற அவர் பொய்த்தலும் செய்யார்; அவர் தவறார் , பின், அவர் வந்திலரே. எனின், கிழவி நிலையே வினையிடத்துரையார்’ என்பர் பெரியோர்; எடுத்த காரியம் இனிது முடியும்வரை, தலைவர் பிறிதொன்றன் மீது கருத்துச் செலுத்துபவர் அல்லர்; அவ்வாறு செலுத்தலும் சரியன்று: ஆகவே, வேலையின் மிகுதியால், அவர் நம்மை மறந்திருக்கிறார், இதுதான் உண்மை; மறவாதிருப்பின், சூளுரைத்துச்