பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஒளவையார்

சென்றவர் வாரதிரார், வந்திலர்; அவர் சூளும் பொய்க்காது; ஆகவே, அவர் நம்மை மறந்திருப்பவரே" என்று கூறி, தலைவன் தவறியவிடத்தும், தவறினான் என அவன்பால் குறை காணுது, அவன் தவற்றிற்கு ஒரு காரணம் கண்டு, தலைவன் தவறிலன்; தவறான் எனக் கொள்ளும் அத் தலைவியின் உள்ளமே உள்ளம்!

"பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மீமிசைத் தாஅய வீய்சுமந்து வந்து
இழிதரும் புனலும், வாரார்; தோழி!பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே;
கால மாரி; மாலை மாமழை
இன்னிசை உருமின முரலும்;
முன்வரல் ஏமம் செய்து அகன்றோரே."

(10) ஒளவையார் எடுத்தாண்ட உவமைகள்:

பழந் தமிழ்ப் புலவர்கள் மேற்கொண்ட செய்யுள் அணிகளுள், உவமவணியே சிறப்புடையது; அவர்கள் கையாண்ட அணி, உவமவணி ஒன்றே எனக் கூறினும் தவறில்லை; பின்னர்த் தோன்றிய அணிகள் எல்லாவற்றையும், ஒருவாறு உவமவணியின் பகுதியாகவே கொள்வர் புலவர்கள்; அதனாலேயே தொல்காப்பியர் உவமவணி ஒன்றிற்கு மட்டுமே இலக்கணம் கூறுவாராயினர்; இதனால், புலவர்கள் பிற அணிகளை அறியாதவர் என்பதல்ல பொருள்; தாம் சொல்ல விரும்பும் பொருள்களைத் தெளிவாகவும் அழகாகவும் சொல்ல உவமவணி ஒன்றே போதும் எனக் கண்டனர். ஆகவே, அவர்கள் பிற அணி பற்றி எண்ணினார் அல்லர்.

ஆங்கிலம் கற்ற நண்பர்கள், ஆங்கிலப் பெரும் புலவராய கோல்டு ஸ்மித் போன்றோர், அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்தாண்டிருக்கும் உவமைகள் சிலவற்றை வைத்துக்கொண்டே, ஆங்கிலப் புலவர் தம் புலமையை, அம் மொழிக்கண் ஆளப்படும் உவமைகளின் சிறப்பை வானளாவப் புகழ்வதைக் காண்கிறோம்; அவர்கள், பழந்