பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஒளவையார்

'பணிதல் நும் கடன்' என அதியமான் பகைவர்க்கு அறிவுரை கூற விரும்பும் ஒளவையார், அவன் ஆற்றலை விளக்க ஆண்ட உவமை இது.

ஒருவர் ஆற்றல் அவருக்கு ஏற்ற இடமாயின் மேலும் மிகுதலும், ஏலா இடமாயின் உள்ள ஆற்றல் குறைதலும் இயல்பு; இதை விளக்க, முதலே நீர்நிலையிடத்ததாயின் ஆற்றல் மிகும்; அந்நிலைக்கண், எதிர்த்த எதையும் அழித்தொழிக்கும். அதற்கு மாறாக எதிர்த்த எதையும் அழித் தொழிக்கும் ஆற்றல் வாய்ந்ததேயாயினும், யானை சேற்று நிலத்தில் சிக்கிக்கொள்ளின், அதை ஆற்றல் குறைந்த குறுநரியும் கொன்று வீழ்க்கும் என்றும் கூறுவர் வள்ளுவர். "நெடும் புனலுள் வெல்லும் முதலை"; "கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா, வேலாள் முகத்த களிறு.”

நீர் நிலைக்கண் முதலைக்கு ஆற்றல் மிகும் என்று கூறும் வள்ளுவர், முதலை நீரில் வாழ்ந்து விடுவதினாலேயே, அத்தகைய பேராற்றலப் பெற்றுவிட்டதாகாது. வாழும் நீர் நிலையின் அளவும் அதற்குத் துணேசெய்தல் வேண்டும்; வாழும் நீர்நிலை, அளவில் பெரிதாய வழியே அம் முதலைக்கு அவ்வாற்றல் உண்டாம்; அதற்கு மாறாக அஃது அளவில் சிறிதாயின், முதலை அவ்வாற்றல் பெறுதல் அரிதே என்ற குறிப்புத் தோன்ற, "புனலுள் வெல்லும் முதலை" என்று மட்டும் கூறாது, 'நெடும் புனலுள் வெல்லும் முதலை' எனப் புனலுக்கு நெடுமை அடை கூட்டிக் கூறினார். அதைப்போன்றே, யானை இடமல்லாஇடம் சேரின் ஆற்றல் குறையும் என்று கூறவந்த வள்ளுவர், நிலத்தை விட்டு நீரில் சென்று விடுவதாலேயே யானையின் ஆற்றல் குறையும் என்று கொள்வது கூடாது; அந்நீர் நிறைவிடம், அவ்யானையின் ஆற்றலைக் குறிக்கும் ஆற்றல் உடையதாதல் வேண்டும்; அது சென்ற இடம், வைத்த காலை ஆழ இழுத்துக்கொள்ளும் சேற்று நிலமாக இருத்தல் வேண்டும்; அத்தகைய சேற்று நிலத்தில் சென்றால் தான் யானையின் ஆற்றல் குறையுமேயன்றி, அது சென்ற இடம் இயற்கையாகவுள்ள சேறாக மட்டும் இருப்பதா