பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஒளவையார்

ஒளவையார் எடுத்தாண்ட உவமைகள் அனைத்தையும் இவ்வாறே விரித்துரைப்பதாயின், நூல்விரியுமாதலின் இடச்சுருக்கம் கருதி, அவர் மேற்கொண்ட சிறப்புடை உவமங்கள் சிலவற்றைச் சுட்டிச் செல்கின்றேன்; படி போர் விரித்துப் பொருள் கொள்வாராக.

கற்றோர் சென்ற இடமெங்கும் சிறப்பே பெறுவர் என்பதற்குத் தொழில் வல்ல தச்சன், தன் தொழிற் கருவிகளோடு காட்டுள்விடப்படின், அவனுக்கு அக் காடு முழுதும் பயன் அளித்தலையும்,

"மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே;
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"

தன்பால் வந்து பாராட்டிய புலவர்க்கு, அதியமான் பரிசில் அளித்தல் தவறாது என்பதைக் குறிக்க, யானே தன் கையில் கொண்ட பொருள், அதன் கோட்டளவும் சென்ற பின்னர், அதற்குப் பயன்படுதல் தப்பாது என்பதையும்,

"'அதியமான் பரிசில்......... யானைதன்
"கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்யா காதே" (புறம்: க0க)

புலவர்க்கு இனியனாய்ப் பகைவர்க்கு இன்னானாய்த் தோன்றும் அதியமானுக்கு நீரிற்குளிப்புழி, சிறுவர்கள் தன் கொம்பைப் பிடித்துக் குதித்துக் கழுவினும் அவர்கள் பால் அன்பும், மதங்கொண்டவிடத்து எவரும் தன்னை அணுகுதற்கரிய சினமும் கொள்ளும் யானையையும்,

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறுபோல
இனியை பெரும! எமக்கே; மற்றதன்
துன்னரும் கடாஅம் போல
இன்னாய்; பெரும! நின்ஒன்னா தோர்க்கே" (புறம்:௯௪)

பகைவரை வென்ற பின்னர் பிறந்த மகனைக் கண்டு நிற்கும் காவத்தும், வாடாத சினம் கொண்டு, கண் சிவந்து