பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஔவையாரால் பாடப்பெற்றோர்

59

இவ்வாறு, பெரும்படையும், பேரரசும் பெற்றிருந்தும், சிறந்த அரசுரிமையைப் பெற்றுள்ளோம் என்று பெருமைகொண்டு, அதுவே போதும் என அமைதிகொள்ளும் உள்ளத்தான் அல்லன்: தன் காலத்தில், தன்னினும் சிறந்தானாக ஓர் அரசன் உளன் என்ற நிலையிருத்தலை வெறுத்தான்; அவன் காலத்தில், திருக்கோவலூரில், மலையமான் வழிவந்த அரசன் ஒருவன் ஆண்டு வந்தனன்; அவன், தன் முன்னோர்களைப்போன்றே ஆற்றல் மிக்கோன்; தமிழ் வேந்தர் மூவரும், அவனைத் தம் படைத்துணேயாகப் பெறுவதைப் பெரிதும் விரும்புவர்: மூவேந்தர்களிடையே மூளும் போரில், அவன் யார்பால் நின்று போர்த்துணை புரிவானே, அவரே வெற்றி பெறுவர்; அத்துணேப் போர்ப்பயிற்சி யுடையானவன், இஃது அதியமானுக்கு, அளவிலாப் பொறாமையை உண்டாக்கிற்று; உடனே பெரும்படை கொண்டு, கோவலூரைத் தாக்கினான், கோவலூர் முற்றும் அழிந்தது; மலையமானும் தோற்றான் ; பின்னர்த்தான் அதியமான் போர்வேட்கை ஒர் அளவு தணிந்தது.

இத்தகைய போர்வேட்கை மிக்குடையனே எனினும், அவன்பால் சிறந்த குணங்கள் பலவும் செறிந்து விளங்கின; உலகம் வாழ வாழும் பெரியோர், 'புகழ் எனின் உயிரும் கொடுப்பர்; பழி எனின் உலகுடன் பெறினும், கொள்ளலர்" என்பர் ஒரு பெரியார். 'நல்லாறு எனினும் கொளல் தீது" என்றார் வள்ளுவர். "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழி நமக்கு எழுக என்னாய்' எனப் பிறர் கொடுக்கக் கொள்வதைப் பழி எனக் கொள்வர் பெரியோர் என்றார் மாங்குடி மருதனர். இவ்வாறு "கொள்” எனக் கொடுப்பதன்றி. 'ஈ' என இரத்தலாகிய இழிபண்பினை அதியமான் பால் காணல் இயலாது; அதியமான், ஏழரசர் ஆட்சியை எள்ளளவும் வழுவின்றி எய்தியும் அமைதி கொள்ளா நாடாசை கொண்டவனே எனினும், நாடுகளைப் போரில் வென்று கொள்வதல்லது, பிறர் கொடுக்க ஏற்றுக்கொள்ளும் இழிகுணமுடையானல்லன்; உயர்ந்த உச்சிகளை