பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

ஒளவையார்

டயுடைய மலைவளம் நிறைந்த நாட்டைக் கொள் எனக் கொடுப்பினும் ஏற்றுக்கொள்ளா உயர்பேர் பண்பாளன் ஆவன் அதியமான். 'கோடுயர் பிறங்கு மலைகெழீஇய, நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன்.”

அதியமான்பால், புகழத்தக்க மற்றொரு பண்பும் உண்டு; அவன் காண்பார்க்கு எளியன்; எளிய பண்புடையான்; அடக்கம் அமரருள் உய்க்கும்; பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கேற்பத், தன் ஆற்றல் அனைத்தையும் பிறர்க்குப் புலனாகாவாறு அடக்கிவைத்துக் கொள்பவன்; ஒடுமீன் ஒட, உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கேபோல், ஏற்ற காலத்தை எதிர்நோக்கியிருப் பார், அக்காலம் வரும்வரை, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதைப்போல் ஏதும் அறியாதார்போல் அடங்கியிருப்பர்; காலம் வந்தவிடத்துப் புலியெனப் பாய்ந்து காரியத்தை முடிப்பர்; 'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து' என்பது வள்ளுவர் கண்ட போர் முறை; அதியமான் அப்போர் முறை யுணர்ந்த பெருவீரன், ஆகவே, தன் ஆற்றலை வெளியிடும் காலம் வருவதற்குமுன், தன்னிடம் அவ்வாற்றல் இருப்பதாகவே காட்டிக்கொள்ளான்; ஆனால், அக் காலம் வந்துவிட்டது எனிலோ, தன் ஆற்றல் அவ்வளவையும் வெளியாக்கி வெற்றிபெறுவன், பழங்காலத்தில், மக்கள் தமக்கு வேண்டிய நெருப்பினை உண்டாக்க மேற்கொண்ட முறைகளுள், தீக்கடைகோலைலே, மரங்களுக்கிடையே இட்டுக் கடைந்து, தீ உண்டாக்குவதும் ஒன்றாம்; கடைந்தவழிப்பெருநெருப்பை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த அத் தீக்கடைகோல், தொழிற்படுதற்கு முன்னர், எத்தகைய தீங்கும் அற்ற நல்ல பொருளாகக் கருதப்பட்டு வீட்டுக் கூரைகளிலும் செருகி வைக்கப்பெறும். அத் தீக்கடை கோலைப் போன்றே, அதியமானும், மற்றக் காலங்களில் எவரிடத்தும் இனியனாய்ப் பழகி, தன் ஆற்றல் காட்டவேண்டி வந்தவிடத்து, தீக்கடைகோலினின்றும் வெளியாம் தீ, எல்லாக் கொடுமைகளுக்கும் நிலைக்களமாய் மாறு