பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையாரால் பாடப்பெற்றோர்

61

வதேபோல், சினங்கொண்டு பகைவரைக் கொன்று குவிப்பதில் கூற்றினையொப்பன்.

இச் சிறப்புக் குணங்களுக்கு நிலைக்களனாய அதியமான், தன் புகழ்பரவும், புலவர்பெருமக்களைப் புரக்கும் பேருள்ளமும் கொண்டிருந்தான்; சிறிது நேரமும் ஒழியாமல், மாரிபோல் ஈயும் வண்கையுடையானவன்; அகமும் முகமும் மலர, அரசவை யமர்ந்து அண்டி வருவோர்க்குத் தேர் பல வழங்கிய நாட்கள் அவன் வாழ்நாளில் பலவாம். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பது வழக்காறு: நேற்று வந்தவரே, இன்றும் பிச்சை ஏந்திவரின், 'என்றைக்கும் இதே ஊர் தானா? இன்றைக்கு இந்த ஊர்; நாளைக்கு அடுத்த ஊர் என்று போவது தானே!" எனச் சீறிவிழும் சிறந்தோர் வாழ்வதையே எங்கும் காண்கிறோம்; அதியன் அத்தகையானல்லன்: "ஒருநாள் அல்ல; இருநாள் அல்ல; பலநாள் தொடர்ந்து, பலரோடு சென்று இரப்பினும், அவ் விரவலர்பால், முதல் நாள் கொண்ட அன்பில் சிறிதும் குறையாத அன்பையே காட்டும் அருள் உள்ளத்தன் ஒருவேளை, பரிசில் அளிப்பதில், அவன் காலம் கடத்துவன் எனினும், அவன் பரிசில் அளித்தல் தவறாது: அளித்தே அனுப்புவன்; யானை, தன் கையில் பற்றிக்கொண்டு, தன் இரு கொம்புகளுக்கிடையே கொண்டுசென்ற உணவுப்பொருள், அதன் வாயினுள் செல்வது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி, அதியமான் வாயிலில் வந்துநின்றோர், அவன் பரிசிலைப் பெறுவது; ஆகவே, அவன்பால் சென்றால், அவன் புகழ் பாடினால், பரிசில் அளிப்பானோ, மறுப்பானோ என மயங்குதல் வேண்டா” என, அவன்பால் பரிசில்பெற்றுப் பழகியோர் சிலர் கூறுவர்.

அதியமான், இத்தகைய பெருந்தகையாய்ப் புகழ் பரவ வாழ்ந்த காரணத்தால்தான், பரணர் பாடினானர்; பெருஞ்சித்திரளுர் புகழ்ந்தார்; அவன் அத்தைமகள் நாகையார் என்ற பெண்பாற் புலவரும் பாராட்டினார்; கடையெழு வள்ளல்களுள் ஒருவனாவன் என உயர்த்திக்