பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரால் பாடப்பெற்ருேர் 73. வரவே, அவர் அவற்றை எண்ணி எண்ணி இரங்குவா தாயினர். - - - - 'கிடைத்த ம்து சிறிய அளவினதாயின், அது முழு. தையும் எமக்கே தந்துவிடுவான். இவ்வாறு, தனக்கென. வரையாது எனக்கே கொடுக்கும் அவ் வன்புடையாளனே இனி எங்கே காண்பன் அளவால் மிக்க மது கிடைப் பின், அதை முதலில் எமக்குக் கொடுத்து, யாங்கள் உண்டு. மகிழ்ந்து பாடுவதுகண்டு தான் மகிழ்ந்து, பின்னர் எஞ்சிய மதுவைத் தான் உண்பான்! இப்போது எம் மகிழ்ச்சி தன் மகிழ்ச்சி எனக்கொள்ளும் அவ் வருள் உள்ளம் உடை யர்னே இனி எங்கே காண்பன் பெருஞ்சோறு கிடைத்த வழியேயன்றி, சிறுசோறு கிடைத்த வழியும், பலரையும் கூட்டி உடன்வைத்து உண்ணும் உயர்வுடையான் இனி, அவ்வாறு உணவளிக்கும் உயர்வுடையோர் யாருளர் உண். ஆணும் சோற்றில், கிடைக்கும் எலும்பையும், கறியையும் எடுத்து எமக்கே தருவன். இவ்வாறு விரும்புவன் அறிந்து கொடுக்கும் அன்பொடு கலந்த அறிவுடையானே எங்கே காண்பன் போர்க்களம் புகுந்தால், வேலும், அம்பும் விரைந்து பாயும் இடம் எங்கே என்று கண்டு அங்குச் சென்று போரிடும் ஆற்றலுடையான்; அத்தகைய ஆண்மை யாளனே இனிக் காணல் இயலுமா? நரந்தம் பூமணம் நாறும் தன் கையால், புலால் நாறும் என் தலையைத் தட விக் கொடுப்பான் அதியமான் அத்துணை அன்புடை யாளனே இனிக் காண்டல் அரிதினும் அரிதே அந்தோ ! அவன் பக்ைவர், அவன் மார்புபிளக்க அம்பு எய்துவிட்ட னரே அவர் எய்த அம்பு அதியமான் மார்பிலான்தத்தது? அன்று, அன்று என்னப்போன்று இரப்போர்தம் கையில் எந்திய உண்கலத்தை உடைத்து, அவர் கையைத்துளேத்து, ஊடுருவிச்சென்று, அதியமானல் புரக்கப்பட்டோர் கண் கள் நீர்மல்க, அருஞ்சொற்கொண்டு அழகியப்ாடல் புனே யும் புலவர்தம் காவிலன்ருே சென்று'தைத்துவிட்டது! எனக்கும், என்போன்ற புலவர்க்கும் பற்றுக்கோடாய் விளங்கிய அவன் யாண்டுளன்.கொல்லோ இன்ரிப் பாடும்