பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.. ஒளவையார் சென்ற துாது. , பிறநாட்டு அரசரவையில், துர்துவரா யமர்ந்து தொழி லாற்றப் பெண் ஒருத்தி சென்ருள் என்ற பெருமைய்ை முதற்கண் பெற்ற நாடு, நம் பைந்தமிழ் நாடே ஒரு நாட்டு அரசியல் தூதுவர், பிறநாடுகளில் தொழிலாற்றுவதை இன்று நாம் காண்கிருேம் என்ருலும், இன்று தாதுவர் அனுப்பப் பெறுதல், பகைவர் வாழ் நாடுகளுக்கு அன்று: இரு நாடுகளுக்குமிடையே பகையின்றி யாதேனும் ஒரு வகையால் உறவுடைய நாடுக்ளுக்கு மட்டுமே, அன்னர் அனுப்பப் பெறுகின்றனர்; அந் நாடுகளோடு நட்புறவு அற்றுப் பகை தோன்றிவிட்டது; இனிப் போர் மூண்டு விடும் என அறிந்தவுடனே, அக் காடுகளுக்கு அனுப்பப் பெற்றிருந்த அரசியல் அாதுவர் திருப்பி அழைக்கப்பட்டு விடுவர்; ஆகவே பகை தோன்ரு வரை, அது தோன்ரு திருக்குமாறு பார்த்துக் கொள்வதே, இக்கால அரசியல் அாதுவர் ஆற்றும் பணியாம் உள்ள பகையைப் போக்க உழைப்பதன்று அவர்கள் தொழில்; ஆல்ை, பண்டைக் காலத்தில், தாதுவர், நட்பர்சர் அவைக்கு அனுப்பப்படுவதி னும், பகையரசர் அவைக்கு அனுப்பப்படு தல்ே மிகுதியாம். உள்ள உறவை வளர்த்துப் புதுப் பகை தோன்ருமல் பார்த் துக் கொள்வதினும், உள்ள பகையை ஒழிக்க முயல்வதே. அக்காலத் துஆதுவர் ஆற்றவேண்டிய அரும்பணியாம்; ஆகவே, இக்காலத் தூதுவர் தொழிலினும், அக்காலத் தூதுவர் தொழில், தொல்லே கிறைந்தது என்பது தெளிவு: தொல்லே தரும் அத் தொழிலினத்தான் துணிந்து மேற். கொண்டார் ஒருவர். அவர், பெருமையும், உரனும் பிறவிக் ப்க் கொண்ட ஆடவர் இனத்தைச் சார்ந்தவர் அன்று; அச்சமும், நானும், மடனும் ஆயவற்றை அணி யெனக் கொண்ட பெண் குலத்திலே பிறந்தாரொருவர்; என்ருல், அது, பெருமைக்குரிய செயலன்ருே செயற். களிய் செய்வார்ன்ருே பெரியார்? அவ் வரும்பெரும் செயல் செய்த பெண்டிர்ப் பெருந்தகையார் ஒளவையாராவர்.