பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார்:சென்ற தாது .8f வேற்றுமை வேந்தர்பால் தூதுரைக்கச் செல்பவர், தாம் வகுத்துக்கூறுவான், கூறியது கூறுவான், ஒலே கொடுத்து கிற்பான் என மூன்றுவகையினராவர். தம் அரசரிடத்தும் தாம் பிறந்த நற்குடியிடத்தும் கிறைந்த அன்புடையராதல், 'துர்துவர்பால் அமையவேண்டிய முதற்பெரும் பண்பாம். கற்குடி என்ற புகழைப் பெறுதற்கேற்ற குணங்கள் எல்லா வற்ருலும் நிறைந்த குடியில் பிறந்தாரையே, தூது செல் தொழிற்கு மேற்கொள்வர். அக்கால அரசர்கள். பெயர் கேட்ட அளவிலேயே, தம் அரசராலும், பகையரசர்த ளாலும் விரும்பிப் பாராட்டத்தக்க பண்புடையராதலும் துரதுவர்க்கோர் இலக்கணமாம். அாதுரைக்கச் செல்வோர். தம் அரசனுக்குத் தம்ம்ால் வன யாவை என்பதை இயல்பாகவே உணரும் நல்லறி வோடு, கற்கவேண்டுவன யாவை என அறிந்து, கற்று உண்டான நூல்அறிவும் உடையராதல், அவர் மேற் கொண்ட் தொழிற்கு இன்றியமையாததாம், ஒருவன் நற்குண நற்செயல்களைக் கேட்டு அறியாதார், முதற்கண் அவனேக் காண கேரின், அவர் மனத்திடை அவனேப்பற்றிய விருப்பு வெறுப்புக்களைத் தோற்றுவிப்பது அவன் உடல் தோற்றமே ஆம் ஆதலின், தாதுவர், கண்டாரால் விரும் பப்படும் தோற்றப் பொலிவுடையராதலும் வேண்டும். தம்மொடு மாறுபடுவார் அனேவரையும் கொன்று ஒழித்தலேயே தொழிலாகக் கொள்வது வேந்தர் இயல்பு; அத்தகையார் ஒப்பாத ஒன்றை ஒப்பவைக்கவே தூதுவர் செல்வர்; ஆதலின் தூதுவர்பால் எடுத்த எடுப்பிலேயே பகையரசர் சினங்கொண்டு சீறிவிழுவர்; ஆதலின், அவ் வரசரிடையே தூதுரைக்கச் செல்வார், இதைக் கூறின், நம் உயிர்க்கும், உடற்கும் ஏதம்பல உண்டாகுமே என அஞ் சாது, தம் அரசற்கு ஆவனவற்றை எடுத்து இயம்பவல்ல அஞ்சாமை உடையராதலும் வேண்டும். பொதுவாக அரசர் எவர்க்கும் பொறுமை என்பதே இராது; வேற்றரசர் விடுத்தது.ாதுவன் கூறுவனவற்றை அவர்கள். கரதுகொடுத்துக் கேட்பர்.என எதிர்பசர்த்தல் ஒள.-6 *.