பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 ஒள்வையார்.

கனவிலும் இயலாது; ஆதலின், ஆாதுரைக்கச் செல்வோர், சுருங்கக் கூறி விளங்கவைக்கும் வல்லமை உடையாாதல் வேண்டும்; அன்றியும், அவனிடத்தில், தம் அரசனுக்கு ஆகவேண்டுவன அவ்வளவையும், ஒன்று, இரண்டு என எண்ணிட்டுக் கூறுதல் கூடாது. இவ்வளவுமா விட்டுக் கொடுப்பது என்ற எண்ணம், இயல்பாக அவனுக்குத் தோன்றத் தாம் சென்ற காரியம் கைகூடாமற் போக விடுதல் கூட்ாது; ஒன்றைக் கூறவேண்டும்; அவ் வொன் மிற்கு அவன் இசைவதிேைல்யே, தமக்கு ஆகவேண்டுவன அவ்வளவும் கிறைவேறுவதாகவும் இருத்தல் வேண்டும்; "இஃது ஒன்றுதானே” என எண்ணி, அவன் இசையினும் இசைவன். - -

மேலும், வேற்றரசரிடையே சென்று, தம் அரச னுக்கு வேண்டுவனவும், அவனுக்கு வேண்டாதனவும் ஆகிய செயல்களைக் கூறும் அாதுவர், தம் சொல்லின்கண் அப் பகையரசர் காது வெறுக்கும் கடுஞ்சொல் ஒன்று கூடக் கலவாது இருப்பதில் கருத்தைச் செலுத்தவேண்டும்; கடுஞ்சொல் கலவாது இருப்பதுமட்டும் அன்று; வெல்லத் தில் நஞ்சு கலந்து கொடுப்பதேபோல், அவனிடம் எதிர் பார்ப்பது, அவன் விரும்பாத ஒன்றே ஆயினும், சொல்லும் போது, 'இதற்கா இசைவது?’ என எண்ணம், அவன் சொல்லும் பொருள்மீது செல்லாது, சொல்லும் சொல்லின் நயத்தில்ே கின்று சொக்கி மயங்கி இசையுமாறு இன்சொல் கூறும் ஆற்றிலும் அவர்க்கு இருத்தல் வேண்டும். தூதுரைக்கச் செல்வோர், பகையரசர், அவையிலும், அரசியல் உணர்ந்த அறிஞர் பலர் இருப்பர் என்பதை உணர்ந்து, தாம் அவரினும்வல்லவராய் இருத்தல்வேண்டும் என்பதை மறத்தல் கூடாது. இவ்வளவு பெரிய பொறுப் பான செயலே மேற்கொண்டு செல்லும் தூதுவர், உள்ளத் துாய்மையற்றவராயின், அவர், ஆசைகளுக்கடிமையாய்த் ஆம் அரசனுக்கு ஆகாதன செய்ய இசையினும் இசைவர்: ஆதலின், உள்ளத்தாய்மை உடைய உயர்பேரொழுக்க ஆன்ல்ைசியே அதுவராக மேற்கொள்ளுதல் வேண்டும்.