பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஒளவையார் : விரும்பி வரவேற்பதே போன்று வரவேற்று, அவர்க் குத் தன் அரண்மனே முற்றும் சுற்றிக் காட்டுவான்போல், அழைத்துக்கொண்டே சென்று, படைக்கலங்களை அழகாக அணிசெய்து வைத்திருக்கும் தன் படைக்கலச்சாலைக்குள் அவரோடு நுழைந்து. ஆங்கே, அடுக்கிவைக்கப் பெற். தறிருக்கும் அவ்வளவு படைக்கலங்களேயும் பார்க்குமாறு செய்துவிட்டான். ஆல்ை, அந்தோ! அவன் எண்ணியது. ஒன்று: கிகழ்ந்தது வேறு முற்றிலும் எதிர்பாரா ஒன்று. - தொண்டைமான் உட்கருத்தை உணர்ந்துவிட்டார் ஒளவையார், இங்கே உள்ள படைக்கலங்களின் வரிசை யைப் பார்க்கிருர், அவற்றின் எண்ணிக்கைப் பெருக்கையும். அளவிடுகிருர்; அங்கே, தகடூர்க்கண். உள்ள அதியமான் படைச்சாலே, அவர் மனப்பார்வைமுன் வந்துநிற்கிறது. அப் படைக்கலங்களின் பாழ்பட்டுப் பயன்படாகிலேயும், பழுதுபார்க்கவேண்டிக் கொல்லன்குடிசையில் குவிந்து கிடக்கும் காட்சியும் தோன்றுகின்றன அவர் மனக்கண் ணிைற்கு. இவ் வேற்றத்தாழ்வு, அவர் கெஞ்சைக் கலக்கு. கிறது; என்ருலும், அவர் அதை வெளிக்குக் காட்டின. ரல்லர் ஏற்றத் தாழ்வு இருப்பினும், எண்ணியதை முடியாதுவிடேன்; அதியமானுக்கு வில்லின் துணே வேண் டிய அளவு இல்லாது இருக்கலாம்: ஆல்ை, என்சொல் துணை அவனுக்கு உண்டு; வில்லினும் சொல் வன்ழை. யுடையது; என் சொல்லாற்றலால் இவன் வில்லாற்றலே. வீழ்த்திவிடுகிறேன் என்று முடிவு செய்கிருர். ஆயுதப்பெருக்கைக் கண்ட ஒளவையார் உள்ளம் அஞ்சி, அதியமானுக்கு அறிவூட்டும் என்ற அகமகிழ்ச்சி யில் திளைத்துப் பெருமிதம் தோன்ற கிற்கின்ற தொண்டைமான அணுகி, ‘அரசே! இவ்வேலின் காம்புகள் எவ்வளவு அழகும், அருமையும், திண்மையும் அமைய ஆக்கப்பட்டுள்ளன 1. வேலின், இலைகள்தாம். எவ்வாறு .திட்டப்பெற்றுப் பளபள. 757 மின்னுமாறு நெய் பூகப் ஆட்டுள்ளன. இவையனைத்தும், அழகாக, வரிசையாக, -iலுத்தப்பெற்று, மாலேயாலும், மயிற்பீலியாலும் அணி