பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் சென்ற துாது $35, செய்யப்பெற்றுக் காணும் காட்சியே காட்சி ! இறுதியாக இவை வைக்கப்பெற்றுள்ள கற்கோட்டைபோன்ற இவ் விட்த்துக் காவலின் கடுமையே கடுமை! இவ்வளவு சீரிய, பெரிய படையுடைய உன் பெருமையே பெருமை " எனப் பாராட்டுவாராயினர்; இப்பாராட்டுரையினே உண்மைப் பாராட்டெனக் கொண்டு மயங்கி மகிழும் தொண்டைமான் அறிவை மேலும் தன்பால் இழுக்க, அவன் காது இனிக்க மேலும் சில கூறுவாராயினர். அரசர்கள், தங்கள்முன்பாகத் தங்களைப் பாராட்டு வதைக் கேட்பதினும், தங்கள் முன்பாகவே தங்கள் பகை வர்களேப் பழித்துரைப்பதைக் கேட்பதிேைலயே மிகவும் மகிழ்வர் என்ற உண்மையை அறிந்தவர் ஒளவையார் ஆதலின், தொண்டைமான் காது குளிர, அதியமானே இழித்துக்கூறத் தொடங்கிவிட்டார். “அரசே! அதியமான் படைக்கலத்தின் கிலே நினக்குத் தெரியுமா? கூறுகின்றேன் கேள் : அவனிடம் உடையாத வேல் ஒன்றுகூடக் கிடையாது; ஒன்றின் நுனி மடங்கிப்போய் இருக்கும் என்ருல், மற்ருென்றின் காம்பு ஒடிந்துபோய் இருக்கும்; இப்படியே, அவன் பெற்றிருப்பன அனேத்தும் முற்றும் பாழ்பட்ட படைக்கலங்களே; அவை அரண்மனேயிலாவது வைத்துக் காக்கப்பட்டுள்ளனவா என்ருல், அதுவும் இல்லை; ஊர்க்கோடியில், ஒதுக்குப்புறமாக உள்ள, கொல்லன் தன் தொழிற்சாலை வைத்திருக்கும் சிறிய குடிசையிலே, கேட்பாரற்றுப் போடப்பட்டுள்ளன; அவ்வளவு பாழ் பட்டது அவன் படைகிலே," என்று அதியமான் படைகளேப் பழித்துரைத்தனர்; இதைக் கேட்ட தொண்டைமான் உள்ளம், மகிழ்ச்சியால் துள்ளும் என்பதைக் கூறவும் வேண்டுமா? - என்ன அதியமான் ஆட்சிநலம் கருதி, தொண்டை மானிடம் தாதுசென்ற ஒளவையார், இவ்வாறு பகையரச னேப் பாராட்டித் தன்னைப் போற்றிப் பேணும் அரசனைப் பழித்தார் எனின், அவர் பண்புடையார் எனப் பாராட் .டற்குரியார் அல்லர்: பழிபாவங்களுக்கு அஞ்சாப் பாதகர்