பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் சென்ற தூது 8? பட்டன் ஆதலின், அங்கே பன்க்வர், தேள், யாணே, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படைகளையும் தாக்கித் தாக்கிப் பழுதுபட்டன. ஆகவே, போர்ப் பழக்கம் பெற்றவை; மேலும், பயன்படாதன எனக் கழிக்கப்பெற்ருல் குப்பை யில் அன்ருே போட்டிருப்பர் கொல்லன் குடிசையில் அவை கிடப்பானேன் அங்கே அவற்றிற்கு என்ன வேலே? மீண்டும் போர் வரின், பயன்படும் வகையில் பழுது பார்க்கவே அவை அங்கே அனுப்பப்பட்டுள்ளன; அவற். றைப் பழுது பார்க்கும் கொல்லரும் அங்கே ஏராளம் அவர்கள் அதற்கு எப்போதும் தயார்: இவைதானே அவர் கூறுவதினின்றும் பெறலாகும் பொருள்? கேட்ட தொண்டைமான் உள்ளம்-ஏன் கேட்டவர் யாவராயினும் அவர் உள்ளந்தான் என்ன-அஞ்சி நடுங்காமல் இன்பப் பெருக்கிலா ஆழும்? காதிற்கினிய சொற்களால், அவ்ன் மனதை மருட்டும் கருத்துரைகளேக் கூறிய ஒளவையார் தம் கல்வியின் பெருமையே பெருமை ! அம்மட்டோ? தொண்டைமான் வேல் பற்றிக் குறிப் பிடும்போது, எவ்வளவு இழிவாக, 'அட! இந்த வேலா!' என்று தொனிக்குமாறு, இழிவுப் போருள் குறிக்கும் சுட்டோடு கூட்டி, இவ்வே' 'எனக் கூறி, அதியமான் வேல் பற்றிக் குறிப்பிடும்போது, கூரிய முனேயை உடைய' வேல் என்று பொருள்படும்ாறு, ‘‘வைந்நதிவேல்" எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். மேலும், தொண்டைமான், பன்டக்கலம்பற்றிக் கூறுழி, அவனேப்பற்றி ஒன்றும் கூரு து கொன்னேவிட்டு, அதியமான் படைக்கலம்பற்றிக் கூறுழி, பொருள் கிறைய உள்ளவழி, அவற்றைத் தனக்கென ஒம்பாது, வருவோர்க்கெல்லாம வாரி வழங்கியும், பொருட், குறைவுண்டான காலத்து, வாரி வழங்க இயலாதாயினும், வருவோரை உடன் வைத்து உண்டும், பொருளால் வறியர், ஆயினர் பலரைத் தனக்கு உறவாக உடையவன் அவன் அன்பிற்கு அடங்கியோராக, எண்ணற்ற பலர் உளோம் : அத்தகையத்லேமைப் பண்புடைய அவன் எங்கள் ந்ேதன் ஆங்ான்; இத்தகு சிறப்புட்ையான்' பண்ட்க்கலம் என