பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88: ஒளவையார் அவுன் படை, தன்னளவிலே பெற்ற பெருமையோடு. அவற்றைக் கொண்டான் பெருமையும் உடையன என்றும் புகழ்ந்துள்ளார். இவ்வளவோடு கில்லாமல், அதியமான் பெற்றுள்ள மற்ருெரு பெருவலி ஒன்றையும் குறிப்பாக எடுத்துக் காட்டித் தொண்டைமானத் துணுக்குறச் செய்துள்ளார். ஒருவனுக்கு, அவன்மாட்டு அன்பு குறையாத சுற்றத்தார் பலர் கிடைப்பாராயின், அவனுக்கு மேலும் மேலும் வளர் தற்கு வழியாம் செல்வம் பல கிடைக்கும். " விருப்பருச் சுற்றம் இயையின், அருப்பரு ஆக்கம் பலவும் கரும்.' (திருக்குறள்: நிஉ.உ) அவ்வாறின்றி, ஒருவன், கோடிகோடியாகப் பொரு ளேக் குவித்திருந்தும், உள்ளம் கலந்து உறவாடும் சுற்றத் தாரைப் பெருளுயின், கரையற்ற, குளத்தில், நீர் கில்லர்து வெளியே போய்விடுதல்போல், அப்பொருள் விரைவில் அழிந்துபோவது உறுதி. - T. -- . . . . ." . 'அளவளர் வில்லாதான் வாழ்க்கை குளவள்ாக் கோடின்றி நீர்நிறைந் தற்று." (திருக்குறள் : டுஉங்) இஃது உலகியல் , அதியமான் பொருளே அள்ளி அள்ளிக் கொடுத்தமையால், அன்புள்ள சுற்றத்தாராக, ன்ற்போர் பலரைப் பெற்றுள்ளான் : ஆகவே, அவனழிவு, அவ்வளவு எளிதன்று; அவன் அழிய அவர் பார்த்திரார் பக்கத்துணையாகப் பரிந்து வருவர் ஆல்ை உனக்கு அத்தகைய பெருஞ் சுற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை.; சுற்றமற்ற உன் வாழ்வு, பெருவாழ்வாகத் தோன்றினும், இறுதியில் அழிதல் உறுதி அதை அழியாமல் தடுத்து கிறுத்துவார் யாரையும் காணேன்,' என அவன் அஞ்சு தற்கான மற்ருெரு காரணத்தையும் எடுத்துக் கூறியுள் ள்ார். இனிய சொற்கூறும் இயல்பிலே, ஈடு இணையற் அறிருந்த காரணத்தால், இவ்வளவும் கூறமுடிந்தது. - இவ்வளவு பொருளும் செறிய, அவர் கூறியன கேட்ட இகrண்டைமான், அவ்வளவோடு ஒரு முடிவிற்கு வந்திருப்,