பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஒளவையார் அடிக்க்த் தாழ்த்திய கோல், உயரே எழுவதற்கு முன்பே, தான் விரைந்தெழுந்து, அடித்தாரைக்கடிக்கவே முயலும்: அதைப்போல், பகைவர் படைக்கலம் கண்டு பயந்து பதுங்" காது, பாம்பெனப்பாய்ந்து தாக்கும் பண்புடைப் பெரு. வீரர்களே. எங்கள்நாட்டுப் போர்வீரர் ஆற்றல் மிக்க பெரும்படை கமக்குளது. ஆகவே, போர்க்களம் போக வேண்டிய தொல்லே நமக்கின்று' என அரண்மனேயகத்தே. அடங்கிக் கிடக்கும் இயல்புடையான் அல்லன் அரசனும்: போர் என்றவுடனே பூரிக்கும் தோள் உடையான் எங்கள் அரசன் அவன் போர் வெறிக்கு ஒர் எடுத்துக்காட்டுத். தருகிறேன் கேள்! ஊர் நடுவே அமைந்த மன்றில் உயரத்தே தொங்கவிடப்பட்டிருந்தது எங்கள் நாட்டுப் போர்ப்பறை, ஒருநாள், பெருங்காற்று அடித்ததால், அம் முழவு அப்படி யும், இப்படியுமாக ஆடத்தொடங்கிற்று, அவ்வாறு: ஆடியபொழுது, யாதோ ஒன்று, அம் முழவின் கண் னிடத்தே பட்டுவிட்டது; உடனே எழுந்தது ஒரு பேரொலி ; அவ்வொலியைக் கேட்டானே இல்லையோ, "அதோ போர்ப்பறை ஒலித்துவிட்டது; போர் மூண்டு விட்டது; போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுவிட்டேன்" னைக் கூறிக்கொண்டே புறப்பட்டுவிட்டான். 'அவ்வளவு போர் வேட்கையுடையான், ஆகவே, எங்கள் நாட்டு அரசனும் ஆண்மையாளன் வீரரும் போர் விருப்புடையார்; படைக்கல்ங்களோ, பல போர் கண்டு பழகியவை அத்தகையானெடு எதிர்த்துப் பகை கொள் னின், யாது நேரும் என்பதைச் சற்று எண்ணிப் பார்ப்பா யாக" எனப் பக்குவமாக, ஆல்ை, பயன்விளையும் வகையில் எடுத்துக் கூறித் தம் கடமையைத் திறமையாக முடித்து மீண்டார் ஒளவையார்; இவ்வளவு பொருளும் பொதிய அவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலே காணப்படு: கின்றன; அவை இதோ: - - 'இவ்வே, பீலி அணிந்து மாலைகுட்டிக் கண்திரள் கோன்காம் திருத்தி, கெய் அணிந்து, கடியுட்ை வியன் ககரவ்வே: அவ்வே,