பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. ஒள்ண்வ்யாரைப் பற்றிய கதைகள் உலகோர் போற்றும் உயர்பேரறிவும், புலமையும் செறிந்த அரும்பெரும் பாடல்களே ஆக்கும் ஆற்றலைப் .புலவர்கள், பலநூல்களைப் பல்லாண்டு, பலகால், பலரோடு பயின்றே பெற்றன்ராகவும், அவ்வருமையை மனதிற் கொள்ளாது, "ஆண்டவன் அருள் பெற்றவர் அவர் ; ஆகவேதான் அவரால் அப்படி அழகாகப் பாடமுடிகிறது; காளி கருண்செய்தாள். ஆகவேதான், கன்னித்தமிழில் அவரால் கவிமழை பொழிய முடிகிறது; அவர் தெய்வப் புலவர்; ஆகவேதான், தித்திக்கும் நடையில் செந்தமிழ்ப் பாக்களைப் பாடிஞ்ர்" என்று கூறி, அப் புலவர்தம் புல மைக்கு மாசுதேடுவதை வழக்கமாகக் கொண்டு விட்டர்ை இடைக்காலத்திார் சிலர். அப்புலவர்கள்த் தெய்வத் தன்மை பொருந்தியவராகவோ, தெய்வ அருள் பெற்றவ ராகவோ கருதிய அவர்கள், அதற்கேற்றவாறு, அப்புலவர் .கள் வரலாற்ருேடு அற்புத் நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொடர்புபடுத்தவும் தொடங்கிவிட்டனர்; இந்த இடர்ப் .பாட்டினின்று ஒளவையாரும் மீண்டவர் அல்லர், ஒளவை யார் பிறப்புக் குறித்தும், அவர்தம் வரலாறு குறித்தும் வழங்கும், அவ்விடைக்காலத்தார் கற்பித்த கதைகள் சில வற்றை இனிக் காண்போம். ..(1) பிறப்பு: ஒளவையார் பிறப்புக் குறித்துக் கூறும் நூல்கள்: திருவள்ளுவர் கதை, கபிலாகவல், ஞானமிர்தம், புலவர் புராணம், விநோதரச மஞ்சரி, பன்னிரு புலவர் சரித்திரம் முதலாயின ஆகும். (க) திருவள்ளுவர் கதை : ஆதிகாலத்தில் பர்ண்டி காட்டு மதுரையில், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து வாழ்ந்த புலவர்கள், தம் கல்விச்செருக்கால் சிவபெருமானே மதியாது இகழ்ந்தனர். அவ்விகழ்ச்சியைப் பொறுக்க மாட்டாச் சிவன், அப்புலவர்தம் செருக்கை அடக்குவதற்