பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. க பி ல ர் யெல்லாம் மேற்கொண்டு பார்த்தாள்; பயனில்லை; மகள் நோய் ஏறுமுகம் காண்பதல்லால் இறங்குமுகம் காண வில்லை. தன் மகளின் நோய் அறிந்து, அந்நோயின் காரணத்தைக் கண்டு, அதைத் தீர்க்கும் வழிதெரிந்து வேண்டுவ செய்யும் வன்மை தனக்கு இல்லையே என ஏங் கிள்ை; அவ்வேக்கத்தால் செய்வன அறியாது, அங்நோய் திர அவ்வூரார் கூறும் அவ் வளவையும் செய்து பார்க்கத் தொடங்கினுள்; ஊரில் உள்ள தெய்வங்கள் அனைத்திற். கும் மலர்களையும், மணம்வீசும் சந்தனத்தையும் துர்விப் புகையெழுப்பிப் போற்றிப் பணிந்தாள்; பணிந்தும் பய னில்லை ; மருந்தாலும் மறையாது, மந்திரத்தாலும் ஒழி யாது நிற்கும் அவள் நோய்க்காரணம் அறியாத காய் கலங்குவளாயினள். தலைமகள் தன் கிலேயும், தாய் துயரும் ஊரார் பழி துாற்றத் துணைபுரிவது காணுகிருள்; தன்னல் விளையும் பழிச்சொல், அவள் தன் குலத்தையே தாக்குவது காணப்பொருள். மணியும் முத்தம் பொன்னும் கொண்டு இழைத்த ஒர் அணி கெட்டதாயினும் மீண்டும் பண்டேபோல் ஆக்கிக்கொள்ளுதல் கூடும் ; ஆனல், உயர் குடிப் பிறந்தார்க்குரிய ஒழுக்கத்தின் இழுக்கா உயர்வும், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மையாகிய சால்பும் கெட்டால், அவற்றை மீண்டும் பெறுதல் இய லாது ; கெட்டபால் நல்லபால் ஆகாது என்ப. மக்கள் தம் கிலையில் தவறின், தலையின் இழிந்த மயிரெனக் கரு திப் பழிக்கப்படுவர். ஆகவே, பழி நமக்கு எய்த எண்ணு மல், இளைஞன்பால் கொண்ட அன்பு, தாய் தந்தையர்பால் தாம் கொண்டிருந்த அன்பையும், பெண்டிர்க்கே உரிய பண்புகளாகிய அச்சம் மடன் முதலானவற்றையும் அழித்துவிட்டது.; ஆகவே, தந்தையின் காவலையும் கடந்துசென்று, உற்ருர் உறவினர் எவரும் அறியாகிலேயில் நாமே இம்மணத்தை ஏற்றுக்கொண்டோம் என்று நம் தாய்க்கு உண்மையை அறிவிப்பதால் பழியொன்றும் இல்லை என்றே எண்ணுகின்றேன்; அவ்வாறு நாம் அறி.