பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. கபிலர் காலமும் அவர்காலப் புலவரும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப்படும் காலம் சங்க காலமே. இதுவே, ஒளவையார் வாழ்ந்த காலமு மாகும் , சங்க காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு என்றும், ஐந்தாம் நூற்ருண்டு என்றும் இரு விதமாகக் கூறுவர். எனினும், கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் சங்க காலம் இரண்டாம் நூற்ருண்டு என்ப தையே உறுதி செய்கின்றன. ஆதலின், சங்க காலப் புலவர் களுள் தலைமைக்கண் கின்ற மூவருள் ஒருவராகிய கபிலரும் அவ் விரண்டாம் நாற்ருண்டைச் சேர்ந்தவரேயாவர். தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய அரசர்களே அல்லாமல், அவர்க்கு அடங்கியும், அடக்காமலும் வாழ்ந்த பல குறுகிலமன்னர்களும் ஆண்டு வந்தனர்; தமிழ்நாடாண்ட மூவேந்தர், தம் காட்டின் எல்லே இது வரை இருந்தால் போதும் என்று எண்ணி அமைதி கொள்ளும் பண்புடையார் அல்லர்; ஒரு காலத்தில், ஒர் அரச குலத்தில், ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் தோன்றி விட்டால் அவன் தன் ஆற்றல, மற்ற இரு பேரரசர்களும், மற்ற சிற்றரசர்களும் உணரும் வண்ணம் உணர்த்த விரும்புவான்; அதற்கு மாருக, ஒர் அரச குலத்தில் பிறந்த ஒருவன், தன் கொடையாலும், கொற்றத்தாலும் பிறர் புகழ வாழ்கிருன் என்ருல், அது காணப்பெருத பிற அர்சர்கள் ஒன்றுகூடி அவனே அழிப்பதும் உண்டு. தமிழர்கள் சிவனேயும், உமையையும், திருமாலேயும், திருமகளேயும், கண்ணனேயும், பலராமனேயும் அறிந் திருந் தன்ர்; மேருவை வில்லாக வளத்துத் திரிபுரத்தை எரித்த இவன் கதை, இமயமலையைச் சிவனருகே இருந்த உமை அஞ்சுமாறு தன் தோள் கொடுத்து எடுக்க முயன்ற இராவணன் கதை, துரியோதனன் தொடையைக் கிழித்து உயிர் போக்கிய பீமன் கதை, மல்லரைக் கொன்ற கண்ணன் கதை ஆகிய கதைகளே அறிந்திருந்தனர் தமிழர்கள்; திருமால் கருகிறம் பலராமன் வெண்ணிறம்