பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 க பி ல ர் கிட்டால் அவர்கள் எண்ணிக்கை சில அாறுகளுக்கு மேலாம். அவர்கள் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதல் கூடாது ; சங்க காலம் என்பது நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகள் வரை நீடித்து இருந்த தாக அறிஞர்கள் கூறுவர். ஆகவே, அப் புலவர்கள் எல்லாம் இந்த நூறு நூற்றைம்பது ஆண்டுகளில் முன்னும் பின்னு மாக வாழ்ந்தவராவர் என்பது முடிபாம். கபிலர் பாராட்டிய அரசர்கள், அவர்களேப் பாராட் டிய புலவர்கள் என்ற முறைகொண்டு நோக்கியவழி, அம்மூவனுர், அரிசில் கிழார், ஒளவையார், கல்லாடனுர், கழாத் தலையார், கழைதின்யானையார், காக்கைபாடினியார், நச் செள்ளையார், நக்கீரர், பரணர், பாலத்தனுர், பெருங்குன்றுார் கிழார், பெருந்தலைச்சாத்தனுர், பொருந்தில் இளங்கீரனுர், மாருேக்கத்து நப்பசலையார், வடமவண்ணக்கன் பெருஞ் சாத்தன் முதலிய புலவர்கள், கபிலர் காலத்திற்குச் சற்று முன்னே பின்னே வாழ்ந்தவராவர் என்பது புலப்படும். இவர்களுள் கழாத்தலையாரைக் கபிலர் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆகவே, அவர், கபிலருக்கு முற்பட்டவ ராவர் என்று கொள்ளுதல் கூடும்; அரிசில்கிழார், பரணர், பெருங்குன்றார்கிழார் மூவரும் கபிலரோடு ஒன்று சேர்ந்து, கண்ணகியின் துயர் போக்க அவள் கணவன் பேகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். ஆதலின், அவர்களைக் கபிலர் காலத்தில் வாழ்ந்தவராகக் கருதுதல் கூடும். ஒளவையார், நக்ரேர், பெருங்குன்றார்கிழார், பொருந்தில் இளங்ாேனுர், மாருேக்கத்து நப்பசலையார்_முதலிய ஐவரும் கபிலரையும் கபிலர்தம் அரும்பெரும் செயல் ஒன்றையும் பாராட்டி யுள்ளார்கள் ; ஆகவே, அவர்களேக் கபிலருக்குப் பிற்பட்ட வர் எனக் கொள்ளுதல் கூடும்; இவர்களுள் பெருங்குன்றார். கிழார், கபிலர் பாராட்டிய பேகனேயும் பாடி, கபிலர், செல்வக்கடுங்கோவாழியாதன்பால் பெற்ற ஊர்களின் எண்ணிக்கை கண்டு வியந்தும் பாடியுள்ளார். ஆதலின், அவர் கபிலர் காலத்திலும் வாழ்ந்து, அவருக்குப் பின்னும், இருந்தவர் எனல் பொருந்தும். х.